Cinema

12 மணி நேரம் வச்சு செஞ்சாங்க பயந்துட்டார் விஜய் பரபரப்பு தகவலை வெளியிட்ட கே.ராஜன், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

Actor vijay
Actor vijay

தற்போது கோலிவுட் முதல் தமிழக அரசியல் களம் என நடிகர் விஜய் பற்றிய செய்திகள் அதிக அளவில் வலம்வந்த வண்ணம் உள்ளன அவற்றில் முதலாவது விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடுகிறது என்பது, இரண்டாவது விஜய் தனது தாய் தந்தை மீது தொடர்ந்த வழக்கு மூன்றாவது நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்கள் ராஜன் பேசிய சர்ச்சையான கருத்துக்கள்.


9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் (Vijay Makkal Iyakkam) போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. நடிகர் விஜய் (Actor Vijay) மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இது ஒருபுறம் இருக்க தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை பலருக்கு தெரிந்த செய்தி ஆனால் விஜய் குறித்து தயாரிப்பாளர்கள் ராஜன் தெரிவித்த கருத்துக்கள் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது,ருத்ரன் இயக்கத்தில் உருவான 2000 பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., பற்றி விஜய் பேசியதால் அவருக்கு 12 மணி நேரம் மனஉளைச்சல் ஏற்பட்டது. இதன் பின் மத்திய அரசை பற்றி விஜய் விமர்சிப்பதே இல்லை.

 விஜய் பயந்து விட்டார். ஏன் என்றால் அவர் கோடீஸ்வரர். பணம் நிறைய இருப்பவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மையும் போய்விடுகிறது. யார் தவறு செய்தாலும் எதிர்க்கும் தன்மை ஏழைகளுக்கே உண்டு என அவர் பேசினார், விஜய் மத்திய அரசை பார்த்து பயந்துவிட்டார் என தெரிவித்ததோடு மட்டுமால்லாமல், ஆண்மை போய்விடுகிறது என தெரிவித்தது விஜய் ரசிகர்களை கோவத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

விஜய் ரசிகர்கள் பலரும் தயாரிப்பாளர்கள் ராஜனை கடுமையாக விமர்சனம் செய்து வரும் சூழலில் ஆண்மை அற்றவர் என பேசியது சலசலப்பை உண்டு செய்துள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக இது போன்று பேசலாமா எனவும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. ஆமாம் தற்போதெல்லாம் விஜய் எந்த அரசியல் கருத்தையும் பேசவில்லையே ஏன் பயமா அல்லது படம் வெளியாகும் நேரத்தில் பேசலாம் என காத்து இருக்கிறாரா?