தனியார் ஊடகம் ஒன்றில் கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற விவாதம் ஒன்றில் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராம. ஸ்ரீனிவாசன் பேசிய பேச்சுகளும் எதிர்தரப்பு கேள்விக்கு அவர் கொடுத்த விளக்கமும் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில் குணசேகரன் நெறியாளர் பணியை செய்கிறார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ் எழுப்பிய RSS குறித்த கேள்விக்கு பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கொடுத்த பதில் இணையதளவாசிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது, எடப்பாடி பழனிசாமி RSS ஊர்வலத்தை தமிழகத்தில் அனுமதித்தது தவறு என்றால்.,
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே கேரளாவில்தான் ஆர்.எஸ்.எஸ் மாநாடு அணிவகுப்பு அதிகம் நடந்துள்ளது அப்போ தமிழகத்தில் நடந்தால் மதவாத ஆர் எஸ் எஸ் அதுவே கேரளாவில் நடந்தால் மத சார்பற்ற ஆர்.எஸ்.எஸ் சா? பதில் சொல்லுங்க சார் என கேட்கிறார் பேராசிரியர்.
அத்துடன் மஹாத்மா காந்தியை கொன்றது ஆர் எஸ் எஸ் என்று சொல்கிறார் கனகராஜ் அது தவறு நீதிமன்றம், விசாரணை அமைப்புகள் என அனைத்தும் காந்தி கொலையில் ஆர் எஸ் எஸ் பங்கு இல்லை என சொல்லிவிட்டது ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டதுபோல் நீங்களும் அவதூறு வழக்கை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் பேராசிரியர்.
அப்போது இடையில் கேள்வி எழுப்பிய குணசேகரன் மகாத்மா காந்தி கொள்ளப்பட்டது மத வெறியால் தான் என்பதை ஏற்கிறீர்களா என கேட்டார் அதற்கு பதில் அளித்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆம் காந்தி கொள்ளப்பட்டது மதவெறியால்தான் என்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் அவனை மத வெறியனாக மாற்றியது இன்னொரு மதவெறி கும்பல் தானே என பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளை சில நாட்கள் முன்பு பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட அது மீண்டும் வைரலாகி வருகிறது, ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது கொலைபழி சுமத்தும் நபர்களுக்கு பேராசிரியர் கொடுத்த பதில் முறையான பதிலடியாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.