Tamilnadu

நூதன திருட்டு சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு கைது செய்ய படுவார்களா கணவன் மனைவி?

Sivagangai house
Sivagangai house

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட அருணாகிரிப்பட்டினம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பின்பகுதியை இடித்து நில பத்திரம், பணம், உண்டியல், பைக் பதிவு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து சென்ற  நிகழ்வு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


தேவகோட்டையில்  திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டில் சொத்து பிரிப்பது தொடர்பாக சகோதரர்கள் மூவருக்கும் இடையே தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது, இந்த சூழலில் முல்லை கொடி என்பவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

அப்போது சாத்தையா என்ற நபர் வீட்டின் பின்புற. பகுதியை முழுவதுமாக உடைத்து முல்லைகொடி குடும்பத்தினருக்கு சொந்தமான பொருள்களை அத்துமீறி உள்ளே நுழைந்து திருடி சென்றுள்ளதாக தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் கடந்த 29/11/2021 அன்று அளித்த புகார் மனுவில்.



தனது வீட்டிற்குள் சாத்தையா அவரது மனைவி சண்முகவள்ளி மற்றும் சண்முகவள்ளி தந்தை ஆகியோர் அத்துமீறி உள்ளே நுழைந்து கிரய பத்திரம், பணம், மற்றும் பொருட்களை செத்தப்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளார், இந்த சூழலில் கடந்த 6 நாட்களாக இது வரை குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய குற்றவாளி சாத்தையா என்ற நபர் அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் குற்றம் சுமத்தப்பட்ட சாத்தையா என்ற நபர் மீது ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடி செய்தது, பணத்தை பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட நிலையில் தலைமறைவானது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது வரை தேவகோட்டை காவல் நிலையத்தில் குற்றவாளி அத்துமீறி உள்ளே நுழைந்து பொருட்களை திருடி சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட நபர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் சூழலில் இது குறித்து தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடவடிக்கை தாமதமாகும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க இருப்பதாகவும் தற்போது வரை தேவகோட்டை தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மீது நம்பிக்கை இருப்பதாகவும்  திருடி சென்ற தங்கள் பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு தங்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடைபெறும் குற்ற பின்னணி புகார் குறித்தும் அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.