நடப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர், மாநிலங்களவையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக எம்பி ஒருவர் தளபதி வாழ்க, உதயநிதி வாழ்க என கோஷம் போட்ட நிலையில், அவையில் இவ்வாறு எல்லாம் கோஷம் போடக்கூடாது வெளியில் சென்று கோஷம் போடுங்கள் என அவை தலைவர் வெங்கையா நாயுடு பேச வாய் மூடி அமைதியாகினர்.
இந்த சூழலில் அதற்கு இணையான மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது இந்த முறை சிக்கியவர் வைகோ., மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ தென் மாநில எம்.பி.,க்களுக்கு வரும், மத்திய அரசின் அனைத்து கடித போக்குவரத்துகளும் ஹிந்தியில் தான் உள்ளன. ஹிந்தி பேசாத மாநிலங்களின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை இது காட்டுகிறது. மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் என எல்லாமே, ஹிந்தியில் மட்டுமே இருப்பதால் ஒன்றுமே எங்களுக்கு புரிவதில்லை.
இதற்காக மக்களின் கோடிக்கணக்கில் வரிப்பணத்தை மத்திய அரசாங்கம் செலவழிக்கிறது. ஆங்கிலத்தை பின்தள்ளும் போக்கை எங்களால் ஏற்கவே முடியாது என ஆவேசமாக பேசினார் மேலும் அனைத்து மாநில மொழிகளையும், மத்திய அரசின் நிர்வாக நடைமுறைகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது என வைகோ ஆவேசமாக உரையாற்றி கொண்டு இருந்தார்
அப்போது தன் கையில் வைத்திருந்த குறிப்புகளை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது, சபை தலைவர் வெங்கையா நாயுடு இடைமறித்து நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள் அதுவே போதுமானது. அவையில் பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் அவை விதிகள் படி பேசினால் மட்டுமே அவைக்குறிப்பில் ஏறும் நீங்கள் பார்த்து பார்த்து வாசிக்கும் எந்த கருத்துமே , சபைக்குறிப்புகளில் ஏறாது. இதையும் உங்களது வசதிக்காக ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன் என ஒரே போடாக போட்டார் வெங்கைய நாயுடு
இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த வைகோ கையில் வைத்திருந்த பேப்பரை வைத்துவிட்டு உடனே, குறிப்புகள் இல்லாமலேயே பேசத் துவங்கினார். அப்போதும் அனுமதி மறுக்கப்பட்டது. வைகோ தொடர்ந்து பேச முற்படவே வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, "இந்திய மொழிகளில் எதையும் திணிக்கவும் கூடாது. ஒடுக்கவும் கூடாது; ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறிவிட்டு அடுத்தஎம்.பி.,யை பேச அழைத்தார். இதை பார்த்த வைகோ என்ன என்னை பேப்பர் கொண்டு பேச விடமாட்டிர்கள் இல்லாமல் பேச சொன்னாலும் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்னை பேச அனுமதியுங்கள் என ஆவேசம் அடைந்தார்.
அப்போது வெங்கையா நாயுடு, "நீங்கள் ஒரு மூத்த எம்.பி., சபை அலுவல்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், போதுமான அளவு பேசிவிட்டீர்கள் இனியும் அமைதியாக இருக்க வேண்டாம் கிளம்புங்கள் என விவாதத்தை முடித்து வைத்தார் வெங்கையா நாயுடு இதனால் என்ன சொல்வது என அறியாமல் அமர்ந்தார் வைகோ.
வைகோவிற்கா இந்த நிலை ஒரு காலத்தில் இந்திய அரசியலை புரட்டி போடுவேன் என வீர வசனம் பேசிய ஒருவர் இப்போது அவையில் கூட பேச முடியாத பரிதாப நிலைக்கு சென்றுவிட்டாரே என நெட்டிசன்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.