பெரியசாமி தங்கவேல் என்ற ஆசிரியர் தனது சமூகவலைத்தள பக்கங்கள் மூலம் சமூகம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து வருபவர் ஆசிரியரான இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழில் வெளியாகி இருக்க கூடிய காஸ்மீர் பைல்ஸ் திரைப்படம் பார்த்துவிட்டு தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் அது பின்வருமாறு :-
காஷ்மீர் பைல்ஸ் படம் பார்த்துவிட்டு மிகவும் கனத்த இதயத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன்.ஒரு சில இடங்களில் அடக்க முடியாமல் கண்ணீர் பீறிட்டு வருவதை தடுக்க முடியவில்லை. அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு இன அழிப்பு அதுவும் 5 லட்சம் மக்களை அழித்த ஒரு நிகழ்வு சுதந்திர இந்தியாவில் எப்படி நடந்தது என்பதை படம் ஆவணப்படுத்தியுள்ளது.
மதம் மாறு, பெண்களை விட்டுவிட்டு ஓடி விடு, அல்லது செத்துமடி என்ற கோஷங்களை கேட்கும்பொழுது சொல்லவொணா துக்கமும் அதில் நம்மை பொருத்திப் பார்க்கும் பொழுது இனம் புரியாத பயமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள் நாம் இருக்கும் இடம், வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு, மனைவி, மக்கள், வேலை, கார், உங்கள் வீட்டு நாய்க்குட்டி அனைத்தும் உங்களுக்கு வேண்டும் நீங்கள் அதனுடனே இருக்க வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் இல்லை என்றால் ஒன்று உங்கள் மனைவி மற்றும் பெண் குழந்தைகளை மட்டும் அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று.
1990ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவிலேயே இந்தியாவில் உள்ள மக்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.
படத்தில் ஒரு இடத்தில் காஷ்மீர் முதல்வரை பற்றி கூறும் பொழுது அவர் டெல்லியில் இருந்தால் தேசியவாதியாக(Nationalist) இருக்கிறார் மாநிலத்திற்கு வந்தால் மதசார்பற்றவராக(Secularist) இருக்கிறார். ஆனால் தன் மதத்தைச் சார்ந்தவர்கள் உடன் சேரும் பொழுது பொழுது பிரிவினைவாதியாக(Separatist) மாறிவிடுகிறார் என்று எவ்வளவு அழுத்தமான நிதர்சனமான உண்மையை பிரதிபலிக்கும் வசனங்கள்.
போலி மதசார்பின்மை(Pseudo secularism) எவ்வளவு ஆபத்தானது என்றும் படம் விளக்கமாக விவரித்துள்ளது. எப்படி பெரும்பான்மையாக இருந்த காஷ்மீர் இந்துக்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டார்கள் என்றும் ஆவணப்படுத்தி உள்ளது இந்த படம்.
ஒரு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் இருந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. அதில் ஒரு இடத்தில் பாரத பிரதமராக இருந்தவர் காஷ்மீர் முதல்வரின் மனது சங்கடப்பட கூடாது என்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளது.
1990ஆம் ஆண்டு பாரத பிரதமராக இருந்த திரு வி பி சிங் அவர்களின் மேல் இருந்த மரியாதை வெகுவாக குறைகிறது இந்த படத்தை பார்த்த பிறகு. தன் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காக ஐந்து லட்சம் மக்களை பலி கொடுப்பது என்பதை நினைத்துப் பார்க்கும் போது மனம் பதறுகிறது
JNU போன்ற பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு எதிராக எவ்வாறு சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்திய இளைஞர்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்யப் படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
படத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குழந்தையான கிருஷ்ணா பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பேசுவான். அப்பொழுது அவன் பிரிவினைவாதிகள் ஒடுக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு வேறு வழியில்லாத காரணத்தால் அவர்கள் ஆயுதம் எடுக்கிறார்கள் என்று வாதாடும் அப்பொழுது எதிர்தரப்பில் இருக்கும் ஒரு காஷ்மீர் பண்டிட், காஷ்மீர் பண்டிட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றாவது அவர்கள் ஆயுதமேந்தி பார்த்திருக்கிறாயா என்று கேட்பார்.
நசுக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் அதனால் வன்முறையை கையில் எடுக்கிறார்கள் ஆயுதம் எடுக்கிறார்கள் என்ற வாதம் ஒத்துக் கொள்ளவே முடியாத வாதம் என்று மிகத் தெளிவாக புரிய வைக்கப்பட்டுள்ளது
ஒடுக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஆயுதம் மட்டும்தான் எந்த வேண்டுமென்றால் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது அதிகமாக ஆயுதமேந்தி இருக்க வேண்டியவர்கள் இந்துக்கள்தான். அவர்கள் ஏன் வன்முறையை கையில் எடுக்கவில்லை என்ற கேள்வி மனதில் எழுகிறது?? சற்று யோசித்து பார்ப்போம்.
என் மதம்! என் நம்பிக்கை! என் உரிமை! மதத்தை ஆயுதத்தைக் காட்டி மாற்றுவதும், பணத்தை காட்டி மாற்றுவதும் இரண்டுமே மிகக் கடுமையான குற்றமாகும். கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுதானே?? மதத்திற்கு ஒரு சட்டம் எதற்காக?? பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு கட்டாய மதமாற்ற தடைச்சட்டமும், பொது சிவில் சட்டம் அவசியம் மற்றும் காலத்தின் கட்டாயம் என்பதை என்பதை விளக்கி உள்ள படம்.அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. மதமாற்றமும், போலி மதச்சார்பின்மையும் தேசிய அபாயம் என்பதை அனைவரும் உணர வேண்டிய காலம் இது! OTT தளத்தில் தமிழில் இந்த படம் வெளியாகி உள்ளது. முடிந்தால் பாருங்கள்.அவரவர் மதத்தை அவரவர் நம்பிக்கையை வைத்துக்கொண்டு ஒற்றுமையாக இந்தியர்களாக வாழ்வோம் ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.