தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கு வங்க ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்க பதிலுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் என்ற ரீதியில் மேற்கு வங்க ஆளுநர் பதிலடி கொடுக்க தற்போது இந்தியா முழுவதும் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேற்கு வங்க சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் முடக்கியதாக கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்த நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்டாலினின் அவதானிப்புகளில் உண்மை இல்லை என மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் பதில் அளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்குவங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,’ மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில் மு.க, ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், 11ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவாகரங்கள் அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, அரசு கேட்டுகொண்டதையடுத்து சட்டப்பேரவையை முடித்து வைத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஸ்டாலின் உண்டாகியுள்ளார், அரசியல் சட்டம் தெரியாமல் இப்படி உளறிவிட்டார் ஸ்டாலின் என பல்வேறு கிண்டல்கள் எழுந்துள்ளன, மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிநவ் கங்குலி என்பவர் பாவம் ஒரு சட்டம் தெரியாமல் முதல்வர் இப்படி பேசலாமா என கிண்டல் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் டேக் செய்து இருந்தார்.
அண்ணாமலையோ இதற்கு நாங்கள் 8 மாசமாக இது போன்றவற்றை பார்த்து வருகிறோம், நீட் தேர்விற்கு எதிர்ப்பாக ஸ்டாலின் பல முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார் யாரும் மதிக்கவில்லை, பின்பு சமூக நீதி அமைப்பு என ஒன்றை தொடங்கி கடிதம் எழுதினார் அதையும் யாரும் ஏற்கவில்லை இப்போது இது என தன் பங்கிற்கு அண்ணாமலையும் வைத்து செய்துள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம் என்றால் மேற்கு வங்க முதல்வர் மம்தாவே வாய் திறக்காத போது வீம்பாக ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க இப்போது மூக்கு உடைபட்டு நிற்கிறார் என பலரது பதிவுகள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றனர், ஸ்டாலின் தமிழகத்தின் பப்பு என்றும் கிண்டல்கள் வலம்வந்த வண்ணம் உள்ளன.
More watch videos