அய்யோ மாமா போயிட்டியே..! 7 மாத கர்ப்பிணி கதறல்...! மாலையில் மனைவிக்கு வளைகாப்பு... மதியம் கணவனுக்கு மின்சாரம் தாக்கு!special news
special news

மாலையில் மனைவிக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் வயல்வெளிக்கு சென்ற கணவன் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.கடலூர் மாவட்டத்தில் உள்ள உடையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மனைவி பிரியா தற்போது 7 மாத கர்ப்பிணியான இவருக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சிறப்பாக செய்ய வேண்டும் என கணவன் நினைத்திருந்த நிலையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் மாலை வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க இருந்த நிலைகளில் வேலைக்கு சென்று விட்டு வரலாம் என நினைத்து வெளியில் கிளம்பும்போது வயல் வெளியை கடந்து இருக்கின்றார் தமிழரசன்.அப்போது மின் கம்பி அறுந்து கிடந்து உள்ளது. அதனை பார்க்காமல் தமிழரசன் மின்கம்பியை மிதித்ததில்  மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் சென்ற நாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.தமிழரசனின் சடலத்தை பார்த்து அவருடைய மனைவி பிரியா கதறி அழுத காட்சி காண்போரை நிலைகுலைய வைத்து இருக்கின்றது. பின்னர் தமிழரசனின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்வதற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த பகுதியில் தாழ்வான மின்கம்பிகள் இருப்பதாகவும் பழைய மின் கம்பிகள் என்பதால் அடிக்கடி பழுதடைந்து வருவதாகவும், இப்படி அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று ஒரு உயிர் போயுள்ளது என அவ்வூர் மக்கள் பொங்கி எழுகின்றனர். இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமா என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Share at :

Recent posts

View all posts

Reach out