40 வயதிற்கு குறைவானவரா நீங்கள் அடித்தது அதிர்ஷ்டம் 13+1 லட்சம் உங்களுக்கு கிடைக்க எளியவழி !!india
india

சிறு சேமிப்பின் பலன் என்ன என்று பள்ளி காலத்தில் , ஆசிரியர்கள் சொல்லி  கேள்வி பட்டு இருப்போம் ஆனால் அதற்கு கைமேல் பலன் கிடைக்கும் திட்டமாக மத்திய அஞ்சல் துறையில் ஒரு அட்டகாசமான திட்டம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை இதோ அந்த திட்டம் உங்களுக்காக  :-

அஞ்சல் அலுவலகத்தில் 2 வகை திட்டங்கள் உள்ளன ஒன்று 15 ஆண்டு கால திட்டம் மற்றொன்று 20 ஆண்டு கால திட்டம். இதில் உங்கள் வயதிற்கும் விருப்பத்திற்கு ஏற்ப  திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.இந்த இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த திட்டத்தில், 15 ஆண்டு கால சேவிங்ஸில் 6, 9 மற்றும் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-25% பணம் திரும்பக் கிடைக்கும். இதில் மீதமுள்ள 75% பணம் போனஸ் உடன் மொத்தமாக திட்டம் முடிவடைந்த பின்பு கொடுக்கப்படும்.

அதேபோல, 20 ஆண்டு கால சேவிங்ஸில் 8, 12 மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-25சதவிகிதம் பணம் கிடைக்கும். மீதமுள்ள 75% பணம் முதிர்வு காலத்தில் போனஸுடன் வழங்கப்படும்.அவ்வப்போது பணம் தேவை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் ரூ. 10 லட்சம் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு திரும்ப வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை தொடர்ந்த நபர் ஒருவேளை இறந்தால், அவர் யாரை நாமினியாக நியமித்தாரோ அவருக்கு மீதி காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் தொகை சேர்த்து வழங்கப்படும்.உங்கள் பணத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கும் இந்த திட்டத்தில் பெயர் இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டம் 1995 ம் ஆண்டு முதல் தொடக்கத்தில் இருக்கிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ .95 அதாவது 30 நாட்களுக்கு மாதம் 2850 முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் நீங்கள் ரூ .14 லட்சத்தைப் பெறலாம். அதே போல் இந்தத் திட்டத்தின் கீழ், தபால் அலுவலகம் 6 வெவ்வேறு காப்பீட்டுத் திட்டங்களையும் வழங்குகிறது.

கிரெடிட் கார்டு, தேவையில்லாத EMI போன்றவற்றில் பணத்தை விரயம் செய்வதற்கு பதிலாக பயனுள்ள நம்பிக்கையான மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் அலுவலகத்தில் உங்கள் பணத்தை கிராம சுமங்கல் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தால் பணமும் பல மடங்கு பெருகுவதுடன் பாதுக்காப்பான முதலீடாகவும் இருக்கும்.

இதற்கு வரி விலக்கும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு, உடனடியாக இந்த திட்டத்தில் இன்றே சேருங்கள் உங்கள் எதிர்காலத்தை செழிமையாக மாற்றுங்கள்.
Share at :

Recent posts

View all posts

Reach out