
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி சற்று முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து ஒன்றிணை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :- சில பேர் ஆச்சரியமாக ‘இந்து என்று கிருஷ்ணசாமியா பேசுகிறார்’ என கேட்கிறார்கள்.ஆம், ‘இந்து’ என்று கிருஷ்ணசாமி தான் பேசுகிறேன்.! நான் பிறந்த கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ளது மசக்கவுண்டன் புதூர் கிராமம்.
தென் மாவட்டங்களை போல தேவேந்திர குல வேளாளர் சமூகம் அடர்த்தியாக வாழும் பகுதி அல்ல, எங்கள் ஊரில் 50 குடும்பங்கள், எங்கள் ஊருக்கு அருகாமையில் மூன்றே சின்ன கிராமங்கள் தான் இருந்தது. சமூக ஒடுக்குமுறை இல்லாத சமூகங்கள் கூட பிற மதத்திற்கு மாறி வந்தார்கள். ஆனால், நாங்கள் எவ்வளவோ சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் சிலரை போல எந்த மதத்திற்கும் மாறவில்லை.
அந்த சின்ன கிராமத்திலும் கூட எங்களது முன்னோர்களை வழிபட்டும், பாரம்பரியமான ‘இந்து’ என்ற அடையாளத்தோடும் தேவேந்திரகுல வேளாளர்களாக தான் வாழ்ந்து வந்தோம்; வருகிறோம். என் அப்பா ‘இந்து’, எனது முன்னோர்கள் ‘இந்து’, நான் பேசமால் இந்துக்களுக்காக வேறு யார் பேச முடியும்? என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.
டாக்டர் கிருஷ்ணசாமியின் பதிவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது, உங்களை போன்றவர்கள்தான் இந்து மதத்தின் ஆணிவேர், உங்களை போன்றவர்களால் தான் இந்தியாவில் இந்து மதம் இன்றும் பெற்றும்பான்மையாக இருக்கிறது என பலரும் அவரது கருத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.