
ஆளும் திமுக அரசு எழுத்தாளர் மாரிதாஸ் விவகாரத்தில் மீண்டும் ஆடு புலி ஆட்டம் தொடங்கியுள்ள சூழலில் பிரபல இரண்டாம் கட்ட நெறியாளர் சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு காதர் மீரான் என்ற அடையாளம் தெரியாத ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295A, 505 (2), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67, என நான்கு பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் முன்னதாக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, தமிழ்நாடு அரசு குறித்து தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும் மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், கைதை எதிர்த்து மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், காவல் துறையினர் உரிய முறையில் ஆவணமாக பதிவு செய்யாமல், வீடியோவை மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறி வழக்கை ரத்து செய்தார். இந்தநிலையில் மூன்றாவது முறையாக கைது செய்யபட்ட மாரிதாஸ் வழக்கில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது மாரிதாஸ் விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்தால் எங்களுக்கு என்ன மதிப்பு என மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவால் வேலை இழந்த ஒருவர் செந்திலை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதனால் செந்தில் விரக்தியில் தூக்கில் தொங்குவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் அது தவறு என தெரியவந்துள்ளது.
செந்திலுக்கு சீப்பு செந்தில் என்ற பட்டம் வர காரணமாக இருந்தவர் மாரிதாஸ் என்ற போதிலும் செந்தில் தற்போதைய சூழலில் எந்த கருத்தும் சொல்லவில்லை என்கின்றன செந்தில் என்ற சீப்பு வகையராக்கள் ( செந்தில் அவர் பங்கேற்கும் விவாதங்கள் போன்றவற்றில் என்ன மதிப்பு கொடுக்க பட்டதோ அதே மதிப்பு செந்திலுக்கும் கொடுக்கபட்டுள்ளது )