
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜகவின் கிளை செயலாளர் எனவும் சங்கி எனவும் ஆளும் திமுகவை சேர்ந்த சிலர் விமர்சனம் செய்துவந்த சூழலில் தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக சீமான் பேசிய பேச்சுக்கள் கடும் வைரலாக பரவி வருகிறது.
சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை 4 நாளில் மாரிதாஸ் வழக்கில் இருந்து வந்துள்ளார் இது தமிழக அரசுக்கு அவமானம் எனவும் திமுக அரசு தான் உண்மையான சங்கி எனக்கூறி தன் காலில் இருந்த செருப்பை தூக்கி கான்பித்து சைகை செய்தார் சீமான்.
மேலும் பேசிய சீமான் நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்று பேசியது ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது, தொடர்ச்சியாக சீமானை பாஜகவின் கிளை செயலாளர் என சுபவீ போன்றோரும் திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் பலர் விமர்சனம் செய்த நிலையில் உண்மையான சங்கியே திமுகதான் என கடுமையாக சீமான் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
சீமான் செருப்புடன் எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை உண்டாக்கிய நிலையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்து சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என ஆளும் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.