Politics

“அமிட்ஷா குடியரசுத் தலைவரிடம் “ரெட் பைல்” அதை தொடர்ந்து நடந்த அதிரடி திருப்பம். ... இப்போ தெரிகிறதா விஷயம்“

amitsha ,rnravi
amitsha ,rnravi

நேற்றைய தினம், இந்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து ஒரு “ரெட் பைல்” வழங்கினார். அதே சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரும் இருந்தது மிக முக்கியமானது. இது சாதாரண அரசு நடவடிக்கையாக இல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பு, வெளிநாட்டு நிலைப்பாடு, குறிப்பாக பாகிஸ்தானை மையமாகக் கொண்ட முக்கிய முடிவுகளுக்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.


பஹல்காம் தாக்குதலுக்கு பிந்தைய நாட்டின் கோபம் இன்னும் அடங்கவில்லை. 28 இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானை நோக்கிய கோபத்தை எரிவளி போல எரிக்கச் செய்கிறது. “தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது” என்ற வார்த்தைகளை தாண்டி, நேரடி பதிலடி நடவடிக்கையை திட்டமிடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் அமிட்ஷா – ஜெய்ஷங்கர் கூட்டணியின் இந்த ரெட் பைல் அனுப்புதல், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ அல்லது ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவே என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இது போன்று ரெட் பைல் வழங்குவது நாட்டின் மிக முக்கியமான மற்றும் அவசரமான நடவடிக்கைகளுக்குள் தான் இடம்பெறும். அந்தச் சந்திப்பின் வெறும் மூன்று நிமிடங்களே பேசப்பட்டதென்றால், அதில் பத்திரங்களை ஒப்புவிக்கும் மட்டுமே நடந்திருக்க வாய்ப்பு அதிகம். அதாவது – முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதைத் தலைவர் ஒப்புக்கொள்வதற்கான அதிகாரபூர்வ நடைமுறை மட்டுமே.எதிர்காலத்தில் என்ன நடக்கும்? பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்? அல்லது உள்நாட்டிலேயே பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் மீது ஒருங்கிணைந்த நடவடிக்கை? அல்லது ஜெனிவா வகை சர்வதேச மேடைகளில் பாகிஸ்தானை முடக்க அரசியல் நகர்வுகள்?

இந்த “ரெட் பைல்” வழியாக அரசாங்கம் திடீரென ஒரு புதிய ராணுவ நடவடிக்கைக்கு நகரும் முன்னோட்டத்தை உருவாக்கியிருக்கலாம். பொதுமக்கள் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ள சூழ்நிலையில், இது நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அரசியல் முடிவாகவும் இருக்கலாம்.சில நாட்களில் உண்மை வெளிவரும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது – இந்தியா இனி நிச்சயம் அமைதியாக இருக்காது  பதிலடி கொடுக்கும் நேரம் மிக அருகில் இருக்கலாம் என அழுத்தம் திருத்தமாக இந்தியாவின் முக்கிய நகர்வுகளை கொண்டு தெளிவாக அறியலாம்.  

சிந்து நதியை நிறுத்தியது தொடங்கி அடுத்தடுத்து இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்தவர்களை கைதி செய்தல்,  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தல் என மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாகிஸ்தானிற்கு கொடுக்கப்படும் பேரடியாக இருக்கவேண்டும் என்பதே இந்தியர்களின் ஒரே எண்ணமாக உள்ளது.