Politics

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியா? மொத்தமாக விழுந்த ஆப்பு! பதற்றத்தில் இண்டி கூட்டணி!

rahulganthi
rahulganthi

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காஷ்மீர் தாக்குதலுக்கு எல்லா திட்டத்தையும் தயார் செய்தவன் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய பயங்கரவாதியான சைபுல்லா கசூரி என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த நிலையில் தாக்குல் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் மைண்ட் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து உளவுத்துறை வட்டாரம் கூறியது:

குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தாய்பா அமைப்பின் கிளைப்பிரிவாகவே தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் செயல்படுகிறது. 2019ல் இருந்து காஷ்மீரில் நடக்கும் பல முக்கிய தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று வருகிறது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் டாக்டர் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.அந்த தாக்குதலுக்கு பிறகு இப்போது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள், உள்ளூர் பயங்கரவாதிகள் என இந்த தாக்குதலில் மொத்தம் 6 பேர் வரை நேரடியாக ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் அதாவது தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உளவுத்துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகள் வெளிமாநிலத்தவரைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். அதேநேரம் இதில் இரண்டு உள்ளூர்வாசிகளும் இரு வெளிநாட்டினரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பஹல்காமிற்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறை (IB) அதிகாரி ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக காஷ்மீரைச் சேராதவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாத குழு, சம்பவத்திற்கு முன்னதாகவே அப்பகுதியில் உளவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.இந்த தீவிரவாத தாக்குதல் நாடு முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இப்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணையை ஆரம்பித்துள்ளது. 

காஷ்மீரில் 370 சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு குடியரசு தலைவர் ஆட்சி இருந்தது. அப்போது தீவிரவாதிகளை வேட்டையாடி காஸ்மீர் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுகொண்டிருந்து அமரன்,லியோ படங்கள் எல்லாம் எந்தவித இடையூறுமின்றி அந்த பகுதிகளில்  எடுக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள்  காஷ்மீரில் தேர்தல் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தது  இதனடிப்படையில் உச்சநீதிமன்றம்  தேர்தல் நடத்த உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து  தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை பிடித்தது உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார். 

இந்த நிலையில் தற்போது உளவுத்துறை கூறியும் கோட்டைவிட்டுள்ளதால் 26 பேர் பலியாகியுள்ளார்கள், எனவே மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவர ஆலோசித்து வருகிறார்களாம். இது இண்டி கூட்டணிக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.