
பாரத பிரதமர் நரேந்திர மோடி புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் செங்குத்து பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்திருந்தார்.பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.அது மட்டுமில்லாமல் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்வில் ₹ 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற நிலையில் அமலாக்கத்துறை சென்னையில் முகாமிட்டுள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராமேஸ்வரத்தில் திமுக அமைச்சர்கள் மேடையில் இருக்கும் போதே காங்கிரஸ் திமுக கூட்டணியை பொளந்து கட்டிவிட்டார் பிரதமர் மோடி குறிப்பாக நிதி தரவில்லை என கூறும் முதல்வர் ஸ்டாலினை வச்சு செய்து விட்டார். பிரதமர் மோடி பேசுகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது . இந்த நிதி அதிகரிப்பு, தமிழகத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ரயில்வே பட்ஜெட் ஏழு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு ₹900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் ₹6,000 கோடியைத் தாண்டியுள்ளது என்றார். ராமேஸ்வரம் ரயில் நிலையம் உட்பட மாநிலத்தில் உள்ள 77 ரயில் நிலையங்களை மத்திய அரசு நவீனமயமாக்கி வருவதாக புள்ளிவிவரங்களுடன் புட்டு புட்டு வைத்தார்.
2014க்கு முன்பு வரை ரயில் திட்டங்களுக்கு வெறும் 900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்போது யார் கூட்டணி ஆட்சியில் இருந்தனர் என நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இப்போதுபாஜக ஆட்சியில் 6 ஆயிரம் கோடி அதிகம் கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். அத்தகைய கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் எளிதில் மருத்துவம் படிக்க தமிழில் மருத்துவ பாடங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறோம். தமிழ் மொழி, மரபு உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைய முயன்று வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார்கள். அந்த கடிதத்தில் அவர்கள் கையெழுத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் கையெழுத்தைக்கூட தமிழில் போடாமல் இருப்பது எனக்கு வியப்பை தருகிறது" என்றார்.என மூன்று மொழி விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்தார்.
வாரத்தின் முதல் நாளான திங்கள் காலையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே சோதனையில் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.மேலும் நேற்றைய தினம் தமிழக முதல்வர் பிரதமரை வரவேற்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தான் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் நினைவு திமுகவுக்கு வந்து செல்லும். என் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.