டெல்லியில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அடுத்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். 2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களையும் வரவேற்ற மத்திய நிதி செயலாளர், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். மிக மோசமான பெருந்தொற்று காலத்தின் போது தங்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடன் வாங்கும் வரம்புகளை அதிகரித்தல், மாநிலங்களுக்கு மீண்டும் கடன்களை வழங்குதல் போன்றவை குறித்து விவாதிக்க பட்டது.
இதன் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த பழனிவேல் தியாகராஜனிடம் நிருபர் ஒருவர் நீங்கள் பெட்ரோல் டீசலை GST விகிதத்தில் கொண்டுவரக்கூடாது எங்கிறீர்கள் ஆனால் TR பாலு வேறு விதமாக பேட்டி அளித்து இருக்கிறார் என்று கேட்க அதற்கு பழனிவேல் தியாகராஜன் மிகவும் காட்டமாக பதில் அளித்து இருக்கிறார். அந்தம்மா சொன்ன முதல் தகவலே தவறு ஒரு நிருபருக்கு நேர்மை வேண்டும் நான் GST குள் பெட்ரோல் டீசலை கொண்டு வருவது குறித்து ஒரு அறிக்கையே கொடுத்து இருக்கிறேன்.
ஆனால் அதை எல்லாம் பார்க்காமல் அந்தம்மா வாட்டுக்கு வாய்க்கு வந்த வார்த்தையை திணிச்சு கேட்கிறார் ஏதோ TR பாலு அண்ணன் என் மீது இருந்த பாசத்தில் அமைதியாக கடந்துவிட்டார் என பேட்டி அளித்து இருக்கிறார்,இந்த சூழலில் ஒரு பெண் பத்திரிகையாளரை ஒருமையில் அந்தம்மா இந்தம்மா என ஒருமையில் விமர்சனம் செய்த மாநில நிதி அமைச்சருக்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மாநில நிதி அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு சர்ச்சையான நிலையில் பெண்ணியல் பேசும் பத்திரிகையாளர்கள் எங்கே சென்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.