Tamilnadu

பிரதமர் தமிழக வருகைக்கு பிறகு தமிழக பாஜக எடுக்க போகும் அஸ்திரம்.. திமுகவின் அடி மடியில் கை வைக்கிறது!

stallin and modi
stallin and modi

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை திறந்துவைக்க பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி 12 ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார், மதுரை வரும் அவருக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இந்த சூழலில் தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில்  ஜனவரி 12  பொங்கல் விழா நடைபெறுகிறது.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெறுகிறது. 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிகட்டு காளைகளை கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் வருகையை கொண்டாட பாஜகவினர் தயாராகிவரும் வேலையில் பிரதமர் வருகைக்கு பிறகு திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து மக்களை பாஜக சந்திக்க இருக்கிறது, இதில் குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தனி இலாகா அமைக்கப்பட்டு, 100 நாட்களில் தீர்வு காணப்படும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். 

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலாவதாக திருவண்ணாமலை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். நகராட்சி அலுவலகம் அருகே கலைஞர் திடலில் இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. அதில் மனுக்களை செலுத்தியவர்களுக்கு உடனடியாக ஒப்புகைச் சீட்டும் வழங்கப்பட்டது.

100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண்போம் என சொன்ன ஸ்டாலின் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு கண்டாரா என எங்கெல்லாம் ஸ்டாலின் புகார் பெட்டியில் மனு வாங்கினாரோ அங்கெல்லாம் பாஜக பிரச்சாரம் செய்து புகார் மனு அளித்த பொதுமக்களிடம் கேட்க இருக்கிறார்களாம் இதன் மூலம் கிராஸ்ரூட் லெவலில் இறங்கி அடிக்க தயாராகி வருகிறதாம் பாஜக. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் திட்டத்தின் மூலம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு அதே திட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்து மக்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறதாம் பாஜக. இது ஆளும் கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளதாம்.