Tamilnadu

இப்படி வெட்ட வெளிச்சமாக்கிட்டீங்களே அண்ணாமலை..! இதுக்கு முன்னாடி வீடியோ...இப்ப மேப் ..! கதறும் அரசியல் வாதிகள்!

Annamalai
Annamalai

நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், கடந்த 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் நீட் விவகாரம் அதிக அளவில் பேசப்பட்டது. ஆளும் கட்சி தன் கையில் வைத்துள்ள ஆயுதமாக கருதப்பட்டது நீட் பற்றி தான். ஆனால் உண்மையிலேயே நீட் கடந்து வந்த பாதையைப் பற்றி மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அதற்கான ஒரு விவரத்தை உள்ளடக்கிய மேப் ஒன்றை ரெடி செய்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.


இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. இதை படிப்பவர்கள் சாதாரண அடித்தட்டு மக்களாக இருந்தாலும் மிக எளிதாக நீட் கடந்து வந்த பாதையைப் பற்றி தெரிந்து கொள்வார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்காது. அந்த விவரம் இதோ...

2007 முதல் 2016 வரை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 31 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்து இருக்கிறது.


21 டிசம்பர் 2010- மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பெயரில் இந்திய மருத்துவ ஆணையம் 21/12/2010 அன்று மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கியது. அப்போது திமுகவை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத் துறையில் இணை அமைச்சராக இருந்தார்.

18 ஜூலை 2018 - வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நீட் தேர்வை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதில் நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள்

2013 அக்டோபர் -  காங்கிரஸ் - திமுக தலைமையிலான மத்திய அரசாங்கம் இந்த நீட்தேர்வு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தது

2016 ஏப்ரல் 11 மற்றும் 28 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை மாற்றி நீட் தேர்வை மீண்டும் கட்டாயமாக்கியது.

24, 25 மே 2016 - அப்போது மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அறிவித்தது. இதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

1 பிப்ரவரி  2017 - அதிமுக தலைமையிலான தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க சட்டசபையில் ஒரு மசோதாவை நிறைவேற்றியது

15 ஏப்ரல் 2017- மத்திய அமைச்சர் ஜேபி நட்டா தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை பரிந்துரைத்தார்

23 ஆகஸ்ட் 2017 - நீட் தேர்வில் இருந்து மீண்டும் ஓர் ஆண்டு விலக்கு வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆகஸ்ட் 24 2017 - சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வை கருத்தில் கொண்டு மாநில அரசின் பாட திட்டங்களை உடனடியாக தரம் உயர்த்தி இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியவாறு நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றும் தீர்ப்பு அளித்தது.

18 செப்டம்பர் 2017-  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி நிராகரித்தார். 15 செப்டம்பர் 2020 - தமிழக சட்டசபையில் 2017ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பரிந்துரைப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேறியது

ஜனவரி 12 202.2 - பிரதமர் நரேந்திர மோடி 11 புதிய மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் துவக்கி வைத்தார். இதன் மூலம் 1650 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 6320 ஆக உயர்ந்து உள்ளது.

கல்வி ஆண்டு 2021- 2022 - 1806 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட விவரங்கள் அடங்கிய ஒரு மேப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளதால், இதுவரை நீட்  வேண்டாம் என போராடியவர்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், ரொம்ப அப்செட் ஆகி  உள்ளனர்.