Tamilnadu

வாக்கு அளித்த அடுத்த நொடியே.. அவசர அவசரமாக தெலுங்கானா கிளம்பிய ஆளுநர் தமிழிசை..! காரணம் என்ன?

Voting
Voting

இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது, அரசியல் கட்சி தலைவர்களும்,  சினிமா பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் இன்று காலை முதல் தொடர்ந்து வாக்கு அளித்து வருகின்றனர்.


அதில் குறிப்பாக புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட சென்னை வாக்கு அளித்தார். சென்னையில் வாக்கு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு மாநில ஆளுநராக இருந்தாலும் தமிழகம் வந்து வாக்களிப்பதில் பெருமை அடைகிறேன். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்த வரையில் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பது முக்கியமல்ல. கட்டாயம் ஓட்டுப் போடுகிறோமா என்பது தான் முக்கியம் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஏனென்றால் நமக்கு நேரடியாக தொடர்பு இருக்கக் கூடிய நபருக்கு வாக்களித்து, அவரை தேர்வு செய்து நம்முடைய முன்னேற்றத்திற்காகவும், நம் பகுதி முன்னேற்றத்திற்காக வாக்கு அளிக்கின்றோம். எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் என்று கேட்டு கொண்டு உள்ளார். 

மேலும், தெலுங்கானாவில் ஒன்றரை  லட்சம் பழங்குடியின மக்கள் கலந்துக்கொள்ளும் யாத்திரை இன்று நடைபெறுகிறது. அதில் நான் கலந்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், வாக்கு அளித்து விட்டு தான் அங்கு செல்ல வேண்டும் என்பதற்காக இப்போது சென்னை வந்து ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன் என  தெரிவித்து உள்ளார் தமிழிசை.

கொரோனா தாக்கம் இப்போதும் இருப்பதால் நடைமுறைக்கு ஏற்றவாறு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார் தமிழிசை. இதே போன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல் அதிகாரிகள் என அனைவரும் தாங்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டதாக தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்டவை தனித்தனியாக களம் காண்கின்றனர். வாக்குப்பதிவை பொறுத்தவரையில் இன்று  காலை முதலே அந்தந்த கட்சிகள் வாக்கு சாவடிகளில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால்,  சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தலை காட்டிலும், தமிழ்கத்தின் உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.