Cinema

பிரதமரை "தனியே" சந்தித்த அண்ணாமலை திராவிட மாடலை புட்டுப்புட்டு வைத்தார்!

annamalai and modi
annamalai and modi

பிரதமர் பேசுகையில் அண்ணாமலை எங்கே இருந்தார்..!மோடியிடம் அண்ணாமலை தெரிவித்த 3 விஷயம்  என்ன?பிரதமரின் தமிழக வருகை பாஜகவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது, எந்த ஆண்டும் இல்லாத அளவாக சென்னை முழுவதும் பாஜகவினர் கட்டுப்பாட்டில் இருந்தது என்றே சொல்லவேண்டும், சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் பாஜகவினர் பிலெக்ஸ், போர்டு என பிரமாண்ட அளவில் ஏற்பாடு செய்து இருந்தனர்.


இது தவிர்த்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு முந்தைய  ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் ஒவ்வொரு பிரிவு சார்பிலும் தனி தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு அந்தஅமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஏதுவாக முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் இளைஞர் அணி தொடங்கி கலாசார அணி, வழக்கறிஞர் அணி, மாவட்ட தலைவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் பலத்தை காட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை அழைத்து வந்தனர், இதற்கு இடையில் அண்ணாமலை மற்றும் முக்கிய இரண்டு தலைவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டை விடிய விடிய இருந்து மேற்பார்வை செய்ததுடன் பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

இப்படி ஒரு புறம் இருக்க பிரதமர் மோடி தமிழக வருகையின் போது பொது கூட்டம் நடந்த நேரு உள் விளையாட்டு அரங்கில் அண்ணாமலை எங்கே இருந்தார் என்ற கேள்வி எழுந்தது பலரும் அண்ணாமலையை நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தனர் இதற்கு விடை TNNEWS24-க்கு கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து மட்டும்தான் ஆட்கள் வருவார்கள் எனவே கூட்டம் குறைவாக இருக்கும் என திமுக சார்பில் முதலில் கணக்கு போட்டு இருக்கிறார்கள், ஆனால் நடந்தது வேறு தமிழக பாஜக நேரடியாக களத்தில் இறங்கியது, சென்னை தவிர்த்து திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ஏன் தென் மாவட்டமிகளில் இருந்து கூட இரவோடு இரவாக குவிந்து கொண்டே இருந்தனர் பாஜகவினர்.

இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள திமுகவினருக்கு இரவோடு இரவாக அறிவிப்பு ஒன்று சென்றுள்ளது, என்ன செய்வீர்களோ தெரியாது நாளை மாலை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாஜகவினரை காட்டிலும் திமுகவினர் எண்ணிக்கை அதிக அளவில் அரங்கில் இருக்கவேண்டும் என தகவல் சென்று இருக்கிறது.

இதையடுத்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் 200 முதல் 300 நபர்களை தயார் செய்து இருக்கின்றனர், இதனால் மேடையின் ஒரு புறம் பாஜகவினரும் மறு புறம் திமுகவினருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது, திமுக அவசர அவசரமாக ஆட்களை அழைத்து வந்ததில் முக்கிய காரணம் இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக ஒன்றும் இல்லாத கட்சியாக இருந்து இப்போது வலுவான எதிர்க்கட்சியாக தடம் பதித்து இருக்கிறது, இதற்கு அரங்கில் பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் பாஜகவினர் அதிக அளவில் பங்கு பெற்று அதற்கு மம்தா கோவத்தை வெளிப்படுத்த அன்றில் இருந்ததான் மேற்குவங்கத்தில் மம்தாவிற்கு மாற்று பாஜக என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்தது.

அதே போன்று தமிழகத்திலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திமுகவினர் அவசரம் அவசரமாக அழைத்து வரப்பட்டு இருக்கின்றனர், இது ஒருபுறம் என்றால் மேடையில் என்ன பேச போகிறார் முதல்வர் என்ற தகவல் முன் கூட்டியே அண்ணாமலைக்கு தெளிவாக தெரிந்து விட்டதாம், அதில் உள்ள பிழைகள் மற்றும் தவறான தகவலை திரட்டி பிரதமர் மோடியிடம் அன்று இரவே அண்ணாமலை கூறி இருப்பதாகவும் இதற்காக அண்ணாமலை பொது கூட்ட நிகழ்வில் இருந்து தள்ளி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவை தவிர்த்து வருகின்ற செவ்வாய் அன்று பாஜக மிக பெரிய அளவில் பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று போராட்டத்தை நடத்த  இருக்கிறது இது குறித்தும் மாநில அரசிற்கு நெருக்கமாக செயல்படும் மத்திய அரசு பணியாளர்கள் சிலர் குறித்தும் தகவலை அண்ணாமலை திரட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை சென்றதும் முதலில் எப்படி இருக்கிறீர்கள் அண்ணாமலை என கட்டி பிடித்து நலம் விசாரித்து இருக்கிறார் பிரதமர் மோடி அதன் பிறகு கிடைத்த குறைந்த நேரத்தில் அண்ணாமலை இத்தனை விவாகரங்களை பிரதமர் கவனித்திற்கு கொண்டு சென்றுள்ளாராம்.

வருகின்ற 31-ம் தேதி பாஜக எடுக்க போகும் நடவடிக்கை என்ன அதற்கு தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக செய்ய போகும் பதில் நடவடிக்கை என்ன என்பதே இப்போதைய பேசு பொருளாக மாறி இருக்கிறது.