தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில்.,இந்தியா நூறு கோடி தடுப்பூசி செலுத்தியதை கொண்டாடும் விதமாகவும், நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அயராத உழைப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாகவும்
கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை ஆதியோகி சிலையின் முன்னால் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் 100 பேர் கலந்துகொண்டு நன்றி செலுத்தினோம்.நன்றி பிரதமர் மோடி என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு கீழே ஏன் உங்களுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா?
ஈஷா மையம்தான் கிடைத்ததா என திமுக ஆதரவாளர்கள் இன்னும் சில பாஜக எதிர்ப்பாளர்கள் கமெண்ட் பாக்ஸில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்கு பாஜகவினர் முறையான பதிலடியை கொடுத்து வருகின்றனர், எங்கே நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டால் நீங்கள் கதறுவீர்கள் என அண்ணாமலைக்கு நன்றாக தெரியும் அதான் அங்கு நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
உங்கள் ஆட்சியில் அனைத்திற்கும் பெரியார் ஸ்டிக்கர் ஓட்டுவது போன்று, எங்களுக்கு பெரியார் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை, கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க மத்திய அரசு இலவசமாக கொடுப்பது அதை நாங்கள் எங்கு வேண்டாலும் கொண்டாடுவோம் என முறையாக வைத்து செய்து வருகின்றனர்.
திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி பல முன்னணி தலைவர்கள் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது, அதிலும் பெரியாரிஸ்ட்கள் ஈஷா என பெயரை கேட்டாலே அலற தொடங்கிவிடுவார்கள் அங்கு சென்று, கொரோனா தடுப்பூசியில் உலக சாதனை செய்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தால் ஆவேசம் அடையாதானே செய்வார்கள் எனவும் கமெண்ட்கள் வருகின்றன. அண்ணாமலை ஈஷா வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.