புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி சற்றுமுன் அரைக்கூவல் ஒன்றை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவை பின்வருமாறு :- உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கு அறைகூவல்! வங்காளதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல்! புதிய தமிழகம் கட்சி சார்பில் அக். 27-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்!!
அண்டை நாடான வங்காளதேசத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள், ஒரு முதுபெரும் பழமொழியை நினைவுபடுத்துகின்றன. ’To Shoot a Dog, Call It as Mad’ – ’ஒரு பிராணியைக் கொல்வதற்கு முன்பாக அதை வெறி பிடித்தது என்று முத்திரை குத்து’ என்பதற்கிணங்க, வங்காளதேசத்தில் கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் துர்கா பூஜையில், இந்துக் கடவுள்கள் முன் இன்னொரு மதத்தினரின் புனித நூலை வைத்து அவமரியாதை செய்ததாக வாட்சப்பில் செய்தி பரப்பியதன் அடிப்படையில் ’நவகாளி’ என்ற இடத்தில் இஸ்கான் (ISKCON) என்ற இந்து மகாசபை தலைவர்கள் இருவரை எரித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.
இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி 22-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்துக் கோவில்களும், இந்துக்களின் உடைமைகளும் சூறையாடப்பட்டு இருக்கின்றன. 2000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, இந்தியாவுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.1941-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, வங்காளதேசத்தில் ஏறக்குறைய 28 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை, தற்போது 8.9 சதவீதமாகக் குறைந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒட்டுமொத்த இந்துக்களையும் வங்காளதேசத்திலிருந்து வெளியேற்றுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
பரந்த மனப்பான்மை கொண்ட சக இந்துக்களுக்கு தங்களுடைய வழிபாட்டுரிமையும், வாழ்வுரிமையும் இன்று வங்காளதேசத்தில் மறுக்கப்படுகிறது என்பது வருத்தமளிக்கிறது; கவலை அளிக்கிறது. அண்மை காலமாக இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளிலும் இந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடரும் பட்சத்தில், நாளை இந்தியாவிலும், தமிழகத்திலும் இதுபோன்ற வன்முறைகள் நடைபெற வழிவகுத்துவிடும். இதுகுறித்து இந்துக்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரமும், உலக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரமும் வந்திருப்பதாகவேக் கருதுகிறேன்.
எனவே, வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், ஐ.நா உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் புதிய தமிழகம் கட்சி முன்னெடுப்பில், சென்னை-வள்ளுவர் கோட்டத்தில் அக்டோபர் 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைப்புத் தலைவர்கள், ஆதீன மடாதிபதிகள், துறவிகள், சாதுக்கள், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், இந்து உணர்வாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இந்துக்களின் வாழ்வுரிமையையும் வழிபாட்டுரிமையையும் நிலைநாட்டிட,உலக இந்துக்களே ஒன்றுபடுங்கள் அரைக்கூவல் விடுத்துள்ளார் கிருஷ்ணசாமி.
தமிழகத்தில் இந்துக்களுக்காக முதல் முறையாக மிக பெரிய முன்னெடுப்பை பாஜக அல்லாத ஒரு அரசியல் இயக்கம் செய்வது இதுவே முதல் முறை என்பதால் தமிழக அரசியல் பாதையில் மாற்றம் உண்டாகியுள்ளதாக பார்க்கப்படுகிறது, மேலும் வருகின்ற 27-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் இந்துக்கள் மரணத்தை வேடிக்கை பார்க்கும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் இயக்கங்களுக்கும் மிக பெரிய பதிலடியாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.