சுவர் விளம்பரத்தில் பிரதமர் மோடி பெயரை நீக்கி, கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது குற்றச்சாட்டு வைத்துள்ள அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, எதற்கும் ஒரு எல்லை உண்டு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.இவர் அரவக்குறிச்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தனது கட்சி சின்னமான தாமரையை வரைந்து, பிரதமர் மோடி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற சின்னம் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த சுவர் விளம்பரங்கள் பலவற்றில் பிரதமர் மோடியின் பெயர் அழிக்கப்பட்டதாக புகைப்படங்கள் பரவின.
பரவிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு, ஜோதிமணி கருத்து தெரிவித்திருந்தார்.அதில், பாஜக வேட்பாளர்கள், பிரச்சாரங்களில் மோடியின் புகைப்படத்தை போடவே அச்சப்படுவதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தமிழக மக்கள் ‘கோ பேக் மோடி’ என்று சொல்வதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை என மிகவும் தான் தோண்டி தனமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே ஜோதிமணியின் இந்த கருத்துக்கு பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அண்ணாமலை, திமுக-காங்கிரஸ் கட்சியினரே, தங்களது சுவர் விளம்பரங்களில் மோடி பெயரை நீக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதை ஜோதிமணியும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும்,இதனை அவர் தான் செய்திருப்பார் என கருதுவதாக கூறினார்.
இதுபோன்ற மலிவான கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஜோதிமணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை, இதற்கு முன்னர் ஜோதிமணி புதிதாக கட்டப்படும் நாடாளுமன்றம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது என போலி தகவலை பரப்பி சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.