Politics

பிரதமர் குறித்த உதயநிதியின் கருத்திற்கு 24 மணி நேரத்தில் மறக்க முடியாத பதிலடி கொடுத்த பாஜக

பிரதமர் குறித்த உதயநிதியின் கருத்திற்கு 24 மணி நேரத்தில் மறக்க முடியாத பதிலடி கொடுத்த பாஜக
பிரதமர் குறித்த உதயநிதியின் கருத்திற்கு 24 மணி நேரத்தில் மறக்க முடியாத பதிலடி கொடுத்த பாஜக

மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெய்ட்லியையும்,சுஷ்மா சுவராஜ்ஜையும் பிரதமர் மோடி துன்புறுத்தி கொன்று விட்டார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியது இந்தியா முழுக்க பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது.


பாஜகவின் மிக மூத்த தலைவர்கள்,இந்தியாவில் எல்லோருடைய மரியாதைக்கும் உரிய தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாகவும்,ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மக்கள் செல்வாக்கு கொண்ட பிரதமரை இழிவுபடுத்தி பேசியதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை மோடி டார்ச்சர் செய்தார் என்பது அபாண்டமாக மாறும் வாய்ப்பு கொண்டது.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார் சுஷ்மா அவர்களின் மகள் பன்சூரி சுவராஜ்.தயவு செய்து இறந்த என் தாயாரை வைத்து கீழ்த்தரமான அரசியலை செய்யாதீர்கள்,அதுவும் மோடி மீது அபாண்டமான பழியை போடாதீர்கள்.

அவர் என் தாயின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர், எங்களுக்கு நேர்ந்த துன்ப இருளில் உற்ற பக்கபலமாகவும் இருந்தவர்" என்று மனக்குமுறளை கொட்டியுள்ளார்.பிரதமர் மோடி குறித்து ஒருமையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது மிக பெரிய எதிர்ப்பை பாஜகவினர் வைத்தபோதும் கூட பிரதமர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் பாஜகவின் மிக முக்கிய தலைவர்களான அருண்ஜெட்லி, சுஷ்மா சிவராஜ் இருவரையும் மோடி டார்ச்சர் செய்து கொன்றுவிட்டார் என உதயநிதி பேசியதும், அது பிரதமர் காதிற்கு சென்றதும் இப்போது மிக பெரிய அதிர்வலைகளை திமுகவிற்கு உண்டாக்கியுள்ளது, பாரபட்சம் பார்க்காமல் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் மிக உறுதியாக பாஜக தேசிய. தலைமை களத்தில் இறங்கியுள்ளதாகவும்.

அதன் வெளிப்பாடுதான் ஸ்டாலின் மகள் வீடுகளில் வருமான வரி சோதனை, செந்தில் பாலாஜி வீடுகளில் வருமான வரி சோதனை என திமுகவினர் மீது மத்திய அரசின் அணுகுமுறை இறங்கியிருப்பதாகவும், முழுமையாக திமுகவிற்கு எதிராக பாஜக களமிறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருணாநிதி போன்ற பழுத்த அரசியல் திறமை இல்லாத காரணத்தால் திமுகவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளாதாகவும், உதயநிதி, ராசா, தயாநிதி மாறன் என பலரின் பேச்சுக்கள் சொந்த கட்சிக்கே எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது, முதல்வர் கனவில் இருந்த ஸ்டாலினை சொந்த கட்சியினரே இக்கட்டான நிலையில் தள்ளியிருக்கும் சம்பவம் திமுகவினரயே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.