Tamilnadu

தொகுதிக்குள் என்ட்ரியான அண்ணாமலை, புகைப்படத்தை டெலிட் செய்த முதல்வர் !

Annamalai entry to his constituency
Annamalai entry to his constituency

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்குள் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றார், பாஜக நிர்வாகிகளில் ஒருவரான கரு. நாகராஜன் உடன் பாதிப்புகளை ஆய்வு செய்தார் அண்ணாமலை அப்போது, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை அண்ணாமலை வழங்கினார்.


இதையடுத்து கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை அதில் இது மக்கள் வாழ்விடமா? அல்லது மழைக்கால ஏரியா? இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக்கொள்பவர்கள் இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் அத்தியாவசியமான பொருட்களையும் வழங்கி வந்தேன் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை இது ஒருபுறம் இருக்க அண்ணாமலை முதல்வர் தொகுதியில் விசிட் அடித்த சம்பவம் ஒருபுறம் என்றால் மறுபுறம் முதல்வர் போட்டோ சாப் புகைப்படத்தை பகிர்ந்து அதனை நீக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் SG சூர்யா :-  இன்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் கொளத்தூரில் மழை நிவாரணம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்டது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என நாம் சுட்டிக்காட்டியவுடன்,

கையும் களவுமாக பிடிபட்ட முதல்வர் அப்பதிவை 'டெலிட்' செய்து விட்டு ஓட்டம் பிடித்தார். வாழ்க்கை முழுக்க இனி எந்த உ.பி-யும் மத்த கட்சிக்காரனுங்கள போட்டோஷாப் பண்றவங்கன்னுலாம் பேசவே கூடாது என குறிப்பிட்டுள்ளார் கூடவே முதல்வர் டெலிட் செய்த ட்விட்டர் லிங்கையும் இணைத்துள்ளார் சூர்யா.