Tamilnadu

செந்தில் வீடியோ போட்டு மூணு மணி நேரம் தாண்டவில்லை அதற்குள் குப்புற கவிழ்ந்த சம்பவம் !

senthil
senthil

தமிழகத்தை சேர்ந்த ஊடகவியலாளர் செந்தில் விழுந்து விழுந்து ஆய்வு செய்து பாஜகவினரை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே அதனை சுக்கு நூறாக நொறுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


செந்தில் தனது யூடுப் பக்கத்தில் பாஜக கட்சியினர் போட்டோ ஷாப் கட்சியினர் என்றும், அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் எனவும், வெட்கள், ரோசம் இருந்தால் என மிக கடுமையாக ஊடகவியலாளர் என்பதையும் மறந்து தெருமுனையில் பேசும் கட்சியினர் போன்று பேசினார் செந்தில் மேலும் தற்போது ஏற்பட்ட வெள்ளத்திற்கு 10 ஆண்டுகள் ஆன அதிமுக ஆட்சியே காரணம் என மிகவும் ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் அதிகார பூர்வ பக்கத்தில் மார்பிங் செய்யப்பட்ட போலி புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு சென்னையில் முதல்வர் ஆய்வு செய்தார் என விளக்கம் அளிக்கப்பட்டது, இந்த சூழலில்தான் அந்த புகைப்படம் போலி என தெரியவர  பலரும் கேள்வி எழுப்பினர் இல்லாத மோட்டார் எப்படி வந்தது எனவும் கேள்வி எழுப்பினர்.

இது கடும் வைரலானதை தொடர்ந்து முதல்வர் பக்கம் போட்டோசாப் புகைப்படத்தை நீக்கியது, இந்த நிலையில் தான் நெட்டிசன்களிடம் கடுமையாக சிக்கியுள்ளார் செந்தில் வெள்ளம் வந்தது என புகைப்படம் வெளியிட்ட பாஜகவினர் போட்டோ ஷாப் செய்துள்ளனர் என வாய்கிழிய பேசுனீங்களே செந்தில், இப்போது முதல்வரே போட்டோ ஷாப் புகைப்படத்தை பகிர்ந்து நீக்கியுள்ளார் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

செந்தில் வீடியோ வெளியிட்டு மூன்று மணி நேரம் தாண்டுவதற்குள் செந்திலின் குற்ற சாட்டுக்களை குப்பிற கவிழ்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் கணக்கில் போட்டோ ஷாப் புகைப்படம் வெளியானது, செந்தில் என்னவெல்லாம் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தாரோ அது தற்போது திமுக பக்கமே திரும்பியுள்ளது.