சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
ஏராளமான பகுதிகளில் மக்கள் மழை நீரால் சூழப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்ட சூழல் உண்டாகியுள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அரசு சார்பிலும் மற்ற அரசியல் கட்சிகள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க நெட்டிசன்கள் வழக்கம் போல் தங்கள் கிண்டலை தொடங்கியுள்ளனர், வீட்டிற்குள் அரையடி மட்டத்திற்கு மழைநீர் உள்ளே புகுந்து வீடு முழுவதும் நிரம்பி கொண்டு இருக்க இரண்டு இளைஞர்கள் அதில் குளித்து நீச்சல் அடிப்பது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
குறிப்பாக அந்த வீடியோவில் பேக்ரௌண்ட் ம்யூசிக்கில் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என்ற பாடலை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர், இதுதான் ஸ்டாலின் கொடுத்த விடியலா?என்று கிண்டல் அடித்து வருகின்றனர் ஆனால் பரவும் வீடியோ எங்கு எடுத்தது எப்போது எடுத்தது என நெட்டிசன்கள் கூறவில்லை
இது ஒருபுறம் என்றால் மற்றொரு பக்கம் சென்னையில் படகு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் வெளியேறுவதை கலாய்க்கும் விதமாக வடிவேல் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்கும் காட்சியை படகாக மாற்றி நெட்டிசன்கள் ட்ரோல் வீடீயோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு மழைக்கே தாங்காத சென்னை தலைநகரம் இல்லை மழை நகரம் எனவும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.