Tamilnadu

"கியாரே செட்டிங்கா" சு.வெங்கடேசனை பங்கம் செய்த அண்ணாமலை !

Annamalai ips
Annamalai ips

தமிழக பாஜக சார்பில் முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி நுழைந்து தண்ணீரை திறந்துவிட்ட கேரள அமைச்சருக்கு துணை போனதாக தமிழக அரசை கண்டித்தும் துணை போன முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்து மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், விவசாய அணித்தலைவர் நாகராஜ், முன்னாள் எம்எல்ஏ சரவணன் தேனி மாவட்ட பாஜக தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது காரணம் முதல்முறையாக முல்லை பெரியாறு விஷயத்தை தமிழக பாஜக மற்ற கட்சிகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

இதில் கலந்துகொண்ட அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி  சு.வெங்கடேசன் ஆகியோரை விமர்சனம் செய்தார், இன்று பாஜக தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை திசை திருப்ப மதுரை எம்பி ட்விட்டரிலே ஒரு பதிவை போடுகிறார், சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் தவிப்பதற்கு பாஜக தான் காரணம் என்னென்ன சொல்றாங்க பாருங்க என கிண்டல் அடித்தார் அண்ணாமலை.

மூன்று மாதமாக நாங்கள் ஆளும் கட்சியை வலியுறுத்தி வருகிறோம் ஆனால் இந்த விடியாத அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாட்டின் பக்கம் நிற்பார்களா இல்லை பினராயி விஜயன் பக்கம் நிற்கிறார்களா என சொல்லவேண்டும், ஏனென்றால் இந்தியா சீனா யுத்தம் நடந்த போதே இவர்கள் சீனா பக்கம் நின்றவர்கள் என கடுமையாக சாடினார் அண்ணாமலை.

வைகோ அவர்கள் தான் விவசாயத்திற்காக வாழ்ந்தேன் என சொல்கிறார் அது உண்மை என்றால் இப்போது முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ எங்கள் பக்கம் வரவேண்டும் என அழுத்தம் திருத்தமாக அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்தார் அண்ணாமலை.

கியாரே செட்டிங்கா என்று திரைப்படத்தில் ரஜினி அவரை சிக்க வைப்போரை நோக்கி கேட்பார் அதே போல் சென்னை வெள்ளதை மத்திய அரசு மீது பழி போட்டு கேரள கம்யூனிஸ்ட் அரசின் துரோகத்தை திசை திருப்ப நினைத்த வெங்கடேசனை பங்கமாக வைத்து செய்துள்ளார் அண்ணாமலை கூடவே இலவச இணைப்பாக வைகோ அவர்களையும் விமர்சனம் செய்ததது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணாமலை பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும். (சரியாக 15.10 நிமிடத்தில் சு. வெங்கடேசன் குறித்து அண்ணாமலை பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன )