Tamilnadu

நேற்று பிரதமர் என்னிடம் இரண்டு விஷயங்களை தெரிவித்தார் தேனி போராட்டத்தில் அதிரடியாக தெரிவித்த அண்ணாமலை !

annamalai in theni
annamalai in theni

தமிழக பாஜக சார்பில் முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி நுழைந்து தண்ணீரை திறந்துவிட்ட கேரள அமைச்சருக்கு துணை போனதாக தமிழக அரசை கண்டித்தும் துணை போன முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்து மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், விவசாய அணித்தலைவர் நாகராஜ்,முன்னாள் எம்எல்ஏ சரவணன் தேனி மாவட்ட தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது காரணம் முதல்முறையாக முல்லை பெரியாறு விஷயத்தை தமிழக பாஜக மற்ற கட்சிகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டது முக்கியத்துவத்தை பெற்ற நிலையில் இன்றைய தேனி ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை தன்னிடம் பிரதமர் இரண்டு விஷயத்தை சொல்லி அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஊழல் யார் செய்தாலும் சரி அது கவுன்சிலர் மந்திரி ஏன் கோபாலபுறத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எதிர்த்து போராட்டத்தை நடத்துங்கள் என பிரதமர் கூறியதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மக்கள் பிரச்சனைக்கு களத்தில் இறங்கி போராடுங்கள் என பிரதமர் கூறியதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணாமலையின் தேனி ஆர்ப்பாட்டத்தில் கடுமையான கேள்விகளை ஆளும் கட்சியான திமுக, கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன், வைகோ ஆகியோரை நோக்கி முன்வைத்துள்ளார். குறிப்பாக முதல்வர் வடிவேலு போன்று பேச கூடாது தமிழக அரசு முல்லை பெரியாறு அணையில் நீர் திறக்க அனுமதி கொடுத்ததா இல்லையா?

அப்படி கொடுத்தால் ஏன் தேனி கலெக்டர், தமிழக மந்திரி செல்லவில்லை, தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால் கேரள அமைச்சர் எப்படி நீரை திறந்து விட்டார் இதற்கு தமிழக முதல்வர் பதில் சொல்லியே ஆகவேண்டும்,  தமிழக முதல்வர் முதலில் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் பிறகு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன்  காமெடி செய்வதாகவும், வைகோ நியாமானவராக இருந்தால் இந்த விஷயத்தில் எங்கள் பக்கம் நிற்க வேண்டும் ஏன் எனவும் விளக்கம் கொடுத்தார், அண்ணாமலை மைக்கை பிடித்த நொடி முதல் நன்றி சொல்லி விடை பெற்றவரை பாஜக தொண்டர்கள் கைதட்டி உற்சாகமாக இருந்தனர். அண்ணாமலை பேசிய முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது .