Tamilnadu

"மூச்சு" போட்டு ஒரு மனுஷன்.. "கத்துன்னா' இப்படியா பதில் சொல்வது அய்யயோ போச்சே போச்சே கதறும் பிரபல தரப்பு !!

annamalai ips
annamalai ips

மூச்சு போட்டு தனியார் தொலைக்காட்சி நிருபர் கேள்வி கேட்க அதற்கு அண்ணாமலை உங்கள் பருப்பு வேகாது என பதில் அளித்த வீடியோ காட்சிகள் கட் செய்யபட்டாலும் பரவி வருகின்றன.  தமிழக பாஜக சார்பில் முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி நுழைந்து தண்ணீரை திறந்துவிட்ட கேரள அமைச்சருக்கு துணை போனதாக தமிழக அரசை கண்டித்தும் துணை போன முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்து மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், விவசாய அணித்தலைவர் நாகராஜ், முன்னாள் எம்எல்ஏ சரவணன் தேனி மாவட்ட பாஜக தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது காரணம் முதல்முறையாக முல்லை பெரியாறு விஷயத்தை தமிழக பாஜக மற்ற கட்சிகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

இன்று தேனியில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் அதிக அளவில் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முதல்வர் பிணராயி விஜயனிடம் சரண் அடைந்துவிட்டதாக விமர்சனம் செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை அப்போது தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பாஜக கேரளாவில் முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும் என சொல்கிறது, கர்நாடகவிலும் அதே நிலைப்பாடுதான் இப்படி மாநிலத்திற்கு மாநிலம் நிலைப்பாடு மாறுபடுகிறது என கேள்வி எழுப்பினார்.

இப்படி மூச்சை பிடித்து ஒருவர் கேள்வி எழுப்ப அண்ணாமலையோ பொசுக்கென சன் டிவி நிருபர் மூலமாக ஒன்றை சொல்லி கொள்கிறேன் இந்த முறை உங்கள் பருப்பு வேகாது, நீங்கள் தப்பு பண்ணிடீங்க மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.. விடமாட்டோம்.. எப்படி வேண்டுமானாலும் திசை திருப்புங்கள் தப்பு பண்ணியிருக்கீங்க, பின்னால் மண்டியிட்டு இருக்கீங்க.. கேரள அரசு அவமானப்படுத்தியிருக்கு இதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என அதிரடியாக உணர்ச்சி பூர்வமாக பேசினார் அண்ணாமலை.

இப்படி மூச்சு பிடித்து ஒருவர் கேள்வி எழுப்பினால் பொசுக்கு என்று இப்படியா பதில் சொல்வது என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர் ஒரே ஆர்ப்பாட்டம் தான் இதுவரை மாநில உரிமை காக்க உருவான இயக்கம் என்னச்சொல்லிக்கொண்டு இருந்தா திமுக இப்போது முல்லை பெரியாறு விவகாரத்தில் மாநில உரிமையை விட்டு கொடுத்து விட்டதாக  பேசு பொருளாக மாற்றிவிட்டது இத்தனை நாட்கள் மாநில உரிமை காக்கும் இயக்கம் என சொல்லிவந்தது வீண் போய்விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அவற்றை பார்க்க கிளிக் செய்யவும்.