Tamilnadu

முதல்வரை நேரடியாக பதம் பார்த்த அண்ணாமலை இதை வேடிக்கை பார்க்க முடியாது என எச்சரிக்கை!

annamalai and stalin
annamalai and stalin

முல்லை பெரியார் அணையை கேரள அரசாங்கம் தன்னிச்சையாக நீரினை திறந்ததாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்த தேனி மாவட்ட ஆட்சி தலைவர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்தது இந்த சூழலில் இந்த செயல்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது தேனி மாவட்ட ஆட்சியரை மற்றும் தமிழக அமைச்சரை மரபின் படி அழைக்காமல், நவ.11 வரை 139.5 அடியாக நீர்மட்டத்தை  வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையை 137 அடியில் திறக்க, கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு என்ன அவசரம்? கம்யூனிஸ்டுகள் கூட்டணி அரசியல் லாபத்திற்காக தமிழக நலன் தூக்கி எறியப்படுகிறதா? 

இந்த பிரச்சனையில் நமது ஏழை விவசாயிகளின் நலன்களை மதிக்காமல், திமுக அரசு  அரசியல் செய்வதை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியினை டேக் செய்து அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.அண்ணாமலை சுட்டிக்காட்டிய விவகாரம் மிகவும் முக்கியமானது என எழுத்தாளர் சுந்தர் ராஜசோழன் குறிப்பிட்டுள்ளார், இதுகுறித்து அவர் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :-

மோடி எதிர்ப்பு புள்ளியில் மாநில உரிமைகள் தாரை வார்க்கப்படுவதை எல்லா கட்சிகளும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது..தளபதி ரஜினி - மம்முட்டி படத்தை மார்பிங் செய்து இங்கே உருண்டு கொண்டிருந்தார்கள் சில மாதத்திற்கு முன்பு...இதெல்லாம் எதற்கு? கேரளத்திடம் சரணடையவா?

உம்மண்சாண்டி முதல்வராக இருந்த போது வைகோ - கம்யூனிஸ்ட்டுகள் எல்லோரும் போராடினார்கள்..ஆனால் இப்போது சத்தமே இல்லையே ஏன்? கேரள கம்யூனிஸ்ட் எப்போதுமே தமிழர் விரோத ஆட்சியைத்தான் தந்துள்ளது.கேரளாவில் எதிரெதிர் திசையிலிருந்தாலும் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் ஒரே நிலைப்பாட்டை வைத்துள்ளது.

ஆனால் இங்கே அவர்களிருவரும் ஆளும் திமுக கூட்டணியிலிருந்து கொண்டு கேரளாவுக்கு சாதகம் செய்வது தமிழகத்திற்கு அநீதி இல்லையா?பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்துதான் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக அணைபாதுகாப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு.இதற்கு செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் அழுத்தம் சரியான வகையிலிருந்தது.

ஆனால்,திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நடக்கிறது? என குறிப்பிட்டுள்ளார்.  முல்லை பெரியார் விவகாரத்தை வழக்கமாக மாநில கட்சிகள் கையில் எடுக்கும் வேலையில் இந்த முறை பாஜக தலைவர் கையில் எடுத்து இருப்பது ஆளும் கட்சியான திமுகவிற்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது .