Tamilnadu

அடுத்த விக்கெட்டை வீழ்த்திய அண்ணாமலை, இந்த முறை முக்கிய அமைச்சர் பதுங்கல்!

annamalai
annamalai

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதலில் தங்கள் கட்சியினரை சட்ட போராட்டம் நடத்தி பாதுகாப்பது குறிப்பாக ஆளும் திமுக அரசிற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் பாஜகவினரை கைத்துசெய்வதாக புகார் எழுந்த போது அதனை சட்ட ரீதியாக எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க முழு வீச்சில் வழக்கறிஞர் குழுவை செயல்பட அறிவுரை வழங்கியத்துடன் அவரே மேற்பார்வையும் செய்துள்ளார் இதன் மூலம் பாஜகவினர் ஆளும் தரப்பின் மிரட்டலுக்கு பயம் கொள்ளாமல் களப்பணியாற்றி வருகின்றனர்.


இது ஒன்று என்றால் அடுத்தது பிரதமர் குறித்தோ அல்லது பாஜக திட்டங்கள் குறித்தோ ஊடகங்களோ அல்லது அரசியல் கட்சியினரோ தவறான தகவலை பகிர்ந்தால் உடனுக்குடன் நடவடிக்கையில் இறங்குகிறார், இதற்கு சமீபத்திய உதாரணம் ஜீ தமிழ் விவகாரம் மற்றும் குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக ஊடகங்கள் பரப்பிய போலி செய்திக்கு உடனடியாக விளக்கத்தை அளித்து முற்றுப்புள்ளி வைத்தார் அண்ணாமலை.

இதன் மூலம் பாஜக குறித்து ஏதேனும் EXCLUSIVE செய்திகளை வெளியிட வேண்டும் என்றால் ஒன்றிற்கு இரண்டு முறை ஊடகங்கள் செய்தியை உறுதிப்படுத்தி வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன, இதன் மூலம் இதுநாள் வரை "ஊடகங்களை" வைத்து பாஜகவிற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பிம்பம் முழுவதும் சரிய தொடங்கியுள்ளது.

அடுத்தது அண்ணாமலை கைவைத்த இடம்தான் முக்கியமானது தமிழக அமைச்சரவை மற்றும் திமுக முக்கிய தலைகளை அண்ணாமலை சிதறடித்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்,

முதல் விக்கெட் தயாநிதி மாறன் ஒருமையில் பேசினார் மத்திய அரசை கடுமையாக விமர்சனமும் செய்தார் இந்த சூழலில்தான் அண்ணாமலை எச்சரிக்கை ஒன்றை விடுத்தார் அதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், மத்தியிலும் ஆட்சியில் இருக்கிறோம் உங்கள் தொழில் முதலீடு குறித்து அனைத்து தகவலையும் வெளியிட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை அவ்வளவுதான் அன்றில் இருந்து ஆப்லயன் சென்றுவிட்டார் தயாநிதி மாறன்.

இரண்டாவது விக்கெட் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் GST கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விமர்சனத்தை பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக தலைவர் அண்ணாமலை வைக்க மிகவும் தரக்குறைவாக ஒருமையில் ட்விட்டரில் அண்ணாமலையை விமர்சனம் செய்தார் பிடிஆர், அண்ணாமலை ஏன் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு 10 ரூபாய் வரை குறைந்த பின்பும் மாநில அரசு குறைக்கவில்லை என்று தொடர் கேள்வி எழுப்பி வந்தார். இந்த சூழலில்தான் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து திமுகவின் ஐடி விங் மாநில செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது விக்கெட் செந்தில் பாலாஜி மின்துறையில் கொள்முதல் செய்வதில் ஊழல் நடைபெறுகிறது என அண்ணாமலை குற்றசாட்டு வைக்க விஷயம் விஸ்வரூபம் எடுத்தது, மேலும் கொங்கு பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டுகிறார் எனவும் அண்ணாமலை குற்றசாட்டு வைத்தார் இந்த சூழலில் பார் டெண்டர் விஷயத்திலும் செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றசாட்டு எழ அப்படியே அமைதியாகிவிட்டார் செந்தில் பாலாஜி, அண்ணாமலை குறித்தோ பாஜக குறித்தோ எங்குமே செந்தில் பாலாஜி வாயே திறப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது விக்கெட் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.. கோவில்களை திறக்கவில்லை என்றால் பாஜகவினர் மாநிலத்தை ஸ்தம்பிக்க வைப்போம் என எச்சரிக்கை விடுத்தார் அப்போது திமுகவினர் வரலாறு தெரியவில்லை எனவும் மிரட்டும் தொனியில் பதில் கொடுத்தார் அமைச்சர் சேகர்பாபு.. அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய அண்ணாமலை பாஜகவினர் மீது கைவைத்தால் வட்டியும் மொதலுமாக திருப்பி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார். அடுத்த பேட்டியில் நான் எச்சரிக்கை விடுக்கவில்லை அன்பில் அவ்வாறு கூறினேன் என கூறி அமைதியானார் சேகர் பாபு.

கோவில் நகை உருக்குதல், கோவில் பணத்தில் கல்லூரி நடத்ததுதல் என அடுத்தடுத்து விவகாரத்தில் நீதிமன்றம் கொட்டு வைக்க அமைதியானார் சேகர்பாபு. ஐந்தாவது விக்கெட்  அமைச்சர் ராஜ கண்ணப்பன் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குவதில் பெரும் ஊழல் என அண்ணாமலை குறிப்பிட டெண்டரை குளோஸ் செய்துவிட்டு இனி ஆவினில் மட்டுமே இனிப்புகள் கொள்முதல் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் தலைமை செயலாளர் இறையன்பு.

இந்த சூழலில் அடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் என அண்ணாமலை குறிப்பிட்ட சூழலில் விரைவில் அமைச்சர் சங்கரபாணியின் விக்கெட் விழும் என்று எதிர்பார்க்க படுகிறது, அமைச்சர் பதவியை வைத்து கொண்டு சம்பாரிக்கவும் முடியாமல் உள்ளூர் லெவலில் அதிகாரமும் முழுமையாக செலுத்த முடியாமல் இருப்பதால் பலர் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

இந்த கட்டுரையை எழுதியவர் உதயகுமார் செந்திவேல் TNNEWS24 செய்திகளுக்காக.

More watch videos