Tamilnadu

என்ன இப்படி ஆகி போச்சு வைரலாகும் வீடியோ கடும் அதிருப்தியில் ஸ்டாலின்.. இந்த சூழலில் வாக்கு கேட்டு போனால்?

Stallin
Stallin

பல்வேறு மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த காரணம் என்ன என்பது தற்போது தெளிவாகி இருப்பதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு கொடுக்கும் செயல்பாடு தனக்கும் தனது ஆட்சிக்கும் நற் பெயரை உண்டாக்கும் எனவும் மேலும் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு மக்கள் தமிழக அரசின் இலவச பரிசு  பொருட்களுடன் கொண்டாடுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கையில் இருந்துள்ளார்.


ஆனால் அவரது நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக குழைத்து போட்டு இருக்கிறது பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் செய்ததில் நடந்த குளறுபடி, பல இடங்களில் பல பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் மேலும் பலருக்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாகவும் குறிப்பாக வெல்லம் கடும் தரம் குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது இதனை வீடியோ வெளியிட்ட முதியவரை ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கில் கைது செய்து அவரது மகன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ளும் நிலையும் உண்டானது.

இது குறித்த தகவல்கள் மேலும் மக்கள் மனநிலை அனைத்தும் முதல்வர் பார்வைக்கு செல்ல அவர் கடும் கோபம் அடைந்து இருக்கிறார், உணவு துறைக்கு என இருக்கும் செயலாளர் தொடங்கி அமைச்சர் என பலரையும்  இதுதான் நீங்கள் ஆட்சிக்கு பெயர் எடுத்து கொடுக்கும் முறையா என கடுமையாக சாடியிருக்கிறார், இந்த சூழலில்தான் மூத்த அமைச்சர்கள் அவரை சமாதான படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் அதன் மறுநாள் கிராமம் ஒன்றில் மக்கள் போராட்டத்தில் இறங்கிய வீடியோ ஒன்று வைரலாக முழு நம்பிக்கையும் இழந்து இருக்கிறார், இந்த சூழலில் வாக்கு கேட்டு போனால் மக்கள் என்ன பதில் கொடுப்பார்கள் என இதற்கு பொறுப்பான அமைச்சரை விளாசி எடுத்திருக்கிறார் ஸ்டாலின் .

உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் வேறு இதனால் என்ன செய்வது என முடிவு எடுத்தவர் தனி செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து  உடனடியாக மாநகராட்சி தேர்தல் இடங்கள் பலவற்றையும் நகராட்சி இடங்கள் பலவற்றையும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் முடிவை எடுத்துள்ளார் என்கின்றன ஆளும் கட்சி வட்டாரங்கள்.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :-