நேற்று சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மற்றும் தொழிற்துறை அமைப்புகளை சந்தித்தார், ஜவுளி, பின்னலாடை, விசைத்தறி, நெசவுத்தொழில், கோழிப்பண்ணை, விவசாய பொறியியல் கருவிகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள, ஈரோடு நாமக்கல் திருப்பூர் கோவை சென்னை பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்களோடு தொடர் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளை அண்ணாமலை மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவித்தார், இது குறித்து உறுதியான பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.மேலும் சில செய்திகள் இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, கோழிக்கோடு, கொச்சின், திருச்சி போன்ற விமான நிலையங்களில் அதிக அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், ``இந்த 2020-2021 நடப்பு நிதியாண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ தங்கமும், கோழிக்கோடு விமான நிலையத்தில் 128 கிலோ தங்கமும், டெல்லி, திருச்சி விமான நிலையத்தில் தலா 78 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.கொரோனா பேரிடர், கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020-2021 நிதியாண்டில் தங்கம் கடத்தப்பட்டிருப்பது பெருமளவு குறைந்திருக்கிறது.
கடந்த 2019-2020 நிதியாண்டைப் பொறுத்தவரை, மிகப்பெரிய விமான நிலையங்களான டெல்லி, மும்பையில்தான் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அந்த நிதியாண்டில் டெல்லியில் மட்டும் 484 கிலோ தங்கமும், மும்பையில் 403 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.