Tamilnadu

அர்ஜுன் சம்பத் ஒன்னு சொல்ல அதற்கு கிஷோர் சொன்ன பதில் இருக்கே!! போ போ சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கிறது!

Arjun sampath and kishore k
Arjun sampath and kishore k

அரசியல் திறன் ஆய்வாளர் கிஷோர் கே சுவாமி மற்றும் அர்ஜுன் சம்பத் இடையே நடைபெற்ற உரையாடல் வைரலாக பரவி வருகிறது, திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிஷோர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் அதன்படி 153 – ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் செயல்படுதல், 505 (1) (b) – அரசு அல்லது பொது ஒழுங்குக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல், 505 (1) (c) – எந்தவொரு வகுப்பினரையோ அல்லது சமூகத்தையோ மற்றொரு சமூகத்திற்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என மூன்று பிரிவுகளில் கிஷோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


இதைத் தொடர்ந்து கிஷோர் கே.சாமியை ஜூன் 28ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.கிஷோர் கே சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவல் உத்தரவிட்டார்.

இதையடுத்து தன் மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கிஷோர் கே.சுவாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ​​கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து கிஷோர் கே சுவாமி 6 மாத சிறை வாழ்க்கைக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையானார்.

இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கிஷோரை வரவேற்று வருகின்றனர் வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவாளர்களான மாரிதாஸ் மற்றும் கிஷோர் கே.சாமி ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு நேரங்களில் கைது செய்யப்பட்டாலும் ஒரே நாளில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருப்பதி மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்த இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் அதன் பிறகு கிஷோரை அவரது இல்லத்தில் சந்தித்தார் சந்திப்பின் போது இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர் அப்போது கடந்த 6 மாதம் உங்களை மிஸ் செய்தோம் என அர்ஜுன் சம்பத் கிஷோரிடம் தெரிவிக்க பதிலுக்கு கிஷோர் 6 மாதம் எதை மிஸ் செய்தோமோ அதை 6 வாரங்களில் செய்வோம் என பதில் அளித்து இருக்கிறார்.

6 மாதம் சிறையில் இருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என்ற தனது கொள்கையில் தெளிவாக இருக்கிறாராம் கிஷோர் அதன் வெளிப்பாடு தான் அர்ஜுன் சம்பத்திடம் கிஷோர் தெரிவித்த கருத்தாக பார்க்க படுகிறது. வடிவேல் ஒரு படத்தில் சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு என கேட்பார் அதே போல் கிஷோர் திமுகவை விமர்சனம் செய்யவில்லை என்றால்தான் ஆச்சர்யம் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.