பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அவரது மனைவி அரவக்குறுச்சி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் அக்கட்சி தலைமையால் களமிறக்கப்பட்டார் அண்ணாமலை, இஸ்லாமியர்கள் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் இடங்களில் ஒன்றாக கருதப்படும் அரவக்குறிச்சி தொகுதியில் , அண்ணாமலை களம் இறங்கியது பலருக்கும் முதலில் ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
ஆனால் அண்ணாமலை மற்றும் பாஜகவினரின் தீவிர பிரச்சாரம், அரவக்குறிச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்க முடியாத அளவிற்கு, தொகுதியில் பாஜகவின் பலத்தை பன்மடங்கு உயர்த்தியது, பிரச்சாரம் செய்ய பல்வேறு இடங்களில் தடை, திமுகவினர் பாஜக அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்ற போதும் அதனை முறையடித்தார் அண்ணாமலை.
இப்படி சம்பவங்கள் இருக்க ஊடகங்களில் பெரிதும் பேசப்படாத ஒரு நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது, பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் மனைவி அகிலா அண்ணாமலைக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார், வேட்பாளரின் மனைவி என்பதை தாண்டி, கொங்கு மொழியில் தெளிவாக தன் கணவர் ஏன் அரவக்குறிச்சி தொகுதியில் களமிரங்கினார் என மக்களிடையே தெரு முனை பிரச்சாரத்தில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பல்வேறு தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து ஒளிபரப்பிய எந்த ஊடகங்களும் அண்ணாமலை மனைவி அகிலாவின் பிரச்சாரம் குறித்து ஒளிபரப்பு செய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது, அண்ணாமலை செந்தில்பாலாஜியின் செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியதற்கு, திமுகவை சேர்ந்த கனிமொழி சாவல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை மனைவி அகிலாவின் தெளிவான பேச்சு ஆகியவற்றை சுட்டிக்காட்டி, பாஜகவினர் கனிமொழி போன்றோருக்கு கருத்தி ரீதியாக பதிலடி கொடுக்க அகிலாவே போதும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர், திருமதி அகிலா அண்ணாமலை பேச்சின் முக்கிய வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.