Politics

நான் தயார் உள்துறை அமைச்சர் அமிட்ஷா அதிரடி அறிவிப்பு

HM AMITSHAH
HM AMITSHAH

தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது வாக்கு எண்ணிக்கை முடிவுகளை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கிறன அரசியல் கட்சிகள், அதே நேரத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு எதிர் மறையாக, மேற்கு வங்கத்தில் சட்டசபை பொது தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது.


8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் கலவரம், துப்பாக்கி சூடு, கொலை மிரட்டல் என மிகவும் மோசமான நிலையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது, துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, ஆளும் கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவிற்கும் இடையே போட்டி நிலவுகிறது.

வழக்கத்திற்கு மாறாக மம்தா பானர்ஜி கடும் சவாலை எதிர்கொண்டு தேர்தலை சந்தித்து வருகிறார் இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா பதவி விலக வேண்டும் என மம்தா எச்சரிக்கை விடுத்து இருந்தார், மேற்கு வங்கத்தில்5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திரிணாமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளன.

இதனிடையே வடக்கு 24 பாரகனா மாவடத்தில் உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி  தன்னை பதவி விலகும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

மேற்குவங்க மக்கள் சொன்னால் தான் பதவி விலக தயார் என அமித்ஷா கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதம் 4 கட்ட தேர்தல்கள் மீதமுள்ளன, இதற்கிடையே மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவார் என அவருக்கு தேர்தலில் வியூகம் வகுத்து செயல்பட்டு கொண்டு இருக்கும் பிரசாந்த் கிஷோரே தெரிவித்து இருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.