Tamilnadu

முக்கிய நபரிடம் இருந்துவந்த அழைப்பு பெட்டி பாம்பாக அடங்கிய திருமா ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பதாக அறிவிப்பு

thirumavalavan
thirumavalavan

சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

அண்மையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் மோரூரில் பேருந்து நிலையம் அருகில் பொது இடத்தில் விசிக கொடியேற்ற காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அரசியல்கட்சிகள், ஜாதி சங்கங்கள், ரசிகர் மன்றங்களின் கொடிகள் பறக்கும்போது, விசிக கொடியை மட்டும் ஏற்ற அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

விசிக கொடியேற்ற வந்த பொதுமக்கள், பெண்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி 17 பேரை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் விசிக கொடியேற்ற அனுமதி மறுத்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் விசிகவை ஒடுக்குவதிலேயே காவல் துறையினர் முனைப்பாகஉள்ளனர்.

விசிகவை நசுக்கும்காவல் துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார் அத்துடன் எங்கு கொடியேற்ற தடை செய்யப்பட்டதோ அங்கே ஆர்ப்பாட்டம் நடத்தவும் திருமாவளவன் முடிவு செய்து இருந்தார்.
மேலும் மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது,

இந்த சூழலில் திருமாவளவன் சேலம் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் வீணாக சாதி மோதல் உண்டாகலாம் எனவும் காவல்துறை தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முக்கிய நிர்வாகி மூலம் திருமாவளவனிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதோடு உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் நீங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது எங்களுக்கு எதிராக முடியும் எனவும் தெரிவித்தவர், முதல்வர் ஸ்டாலின் சென்னை வந்ததும் நேரம் தருகிறோம் பேசுங்கள் என கூறியுள்ளார்,

இதையடுத்தே சேலம்,மதுரை ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைத்து இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருமாவளவனை நம்பி சேலம் பகுதியில் தங்கள் பலத்தை காட்ட நினைத்த ஒரு தரப்பு கடும் கவலையில் ஆழ்ந்துள்ளது, ஆளும் கட்சிக்கும் காவல்துறைக்கும் திருமாவளவன் பயந்துவிட்டாரா? அல்லது விலை போகிவிட்டாரா? என பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.