இந்திய அளவில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் டுபாக்கூர் செயல் செய்து நெட்டிசன்களிடம் சிக்கி வருபட்டு வருகிறார், அதாவது மருத்துவ துறையால் பல ஆண்டுகளாக முடியாத செயலை செய்வதாக கூறி அப்பாவி மக்களை ஏமாற்றும் செயலும், அதன் மூலமும் பணம் சம்பாரிதலும், மதமாற்றம் போன்ற பின்விளைவுகளும் அதிகரித்து வருகின்றன.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாதரியார் என தன்னை அழைத்து கொள்ளும் நபர், பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணிற்கு தனது ஜெப வலிமையின் மூலம் பிள்ளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார், அந்த வீடியோவில் இப்போதே நீங்கள் கருவுற போகிறீர்கள் என ஜெபிக்கிறார் இறுதியில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதித்து விட்டார் என அவரே கத்துகிறார்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என தெரிகிறது, இருப்பினும் தங்களுக்கு ஏதேனும் மாற்றங்கள் உண்டாகாதா என இருக்கும் அப்பாவி மக்களை இது போன்ற போலி பாதிரியார்கள் பயன்படுத்திக்கொண்டு பணம் பறிப்பதும் அவர்களை குறிவைத்து மதம்மாற்றம் செய்வதும் அதிகரித்து வருகிறது .
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் இது போன்ற பயித்திய சிந்தனை கொண்ட ஏமாற்று பேர்வழிகள் அதிகரித்து வருவதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன , ஒரே நிமிடத்தில் கர்ப்பம் அடைய உதவுவதாக போலி நாடகம் நடத்திய நபரை கைது செய்யவேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர் .
தமிழகத்திலும் சிடியை வைத்தே நோய்களை குணப்படுத்துவோம் என பல பைத்தியங்கள் வலம்வந்த காலமும் உண்டு தற்போதும் அதே போன்ற டெக்னிக் மூலம், மக்களை ஏமாற்ற ஊருக்கு ஊர் போலி பாதிரியார்கள் அதிகரித்து வரும் நிலையில் நாத்திகம் மூட நம்பிக்கை என இந்து மதத்தவரை மட்டும் குறிவைத்து அறிவுரை கூறிவரும் எந்த தரப்பும் இது போன்ற அறிவியலுக்கு ஒப்பாத மூட நம்பிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது . வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் .