Tamilnadu

இது போன்ற அடிமாட்டு மூளைகள் இருக்கும் வரை ... வெளுத்துக்கட்டும் ஷியாம் கிருஷ்ணசாமி !

Shyam krishnasamy
Shyam krishnasamy

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை மூலமாக ஆளும் கட்சியின் குறைகளை சுட்டி காட்டினால் அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி ட்விட்டரில் நேரடியாக கேள்வி எழுப்பும் திமுகவினரை வெளுத்து எடுத்து வருகிறார் . 


அந்த வகையில் திமுகவின் உறுப்பினர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து வாரிசு அரசியல் என்று ஒப்பாரி வைத்தவர்களே எங்கள் கலைஞரின் வாரிசுகள் இங்கே எங்கள் சென்னை மக்களோடு எனவும் 

ஓபிஎஸ் மகன் எங்கே? ராமதாசின் மகன் எங்கே? ஜெயக்குமார் மகன் எங்கே? P.H.பாண்டியன் மகன் எங்கே?  மூப்பனாரின் மகன் எங்கே ? விஜயகாந்தின் மனைவி எங்கே? கிருஷ்ணசாமி மகன் எங்கே ? என கேள்வி எழுப்பி இருந்தார் திமுகவை சேர்ந்த ஒருவர் .,  இதற்கு பதில் கொடுத்த ஷ்யாம் , கருணாநிதி 19 வருடங்கள் CM,ஸ்டாலின் முன்னாள் மேயர் + முன்னால் உள்ளாட்சி துறை அமைச்சர்.

இருந்தும் மூனே நாள் மழைக்கு மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து உணவு இல்லாம எவன் வீட்டு பணத்திலோ இவங்க வள்ளல் போல கொடுக்கும் ரொட்டி பாக்கெட்டுக்கு நிற்கும் நிலை. இதுவா பெருமை? வெட்கம்கெட்டவனுங்களா.. என கேள்வி எழுப்பிய நபரை கடுமையாக சாடிவிட்டார் .

இவை தவிர்த்து ஷியாம் கிருஷ்ணசாமியின் மற்றொரு பதிவுகளும் வைரல் ஆகி வருகின்றன அவை பின்வருமாறு ; சென்னையில் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உலகிற்கே தெரியும்!

முதல்வர் வீதி வீதியாக ஆய்வு செய்து தெரிய வேண்டும் என்பதில்லை.இது திமுகவின் விளம்பரம் மோகத்திற்கும், வரவுள்ள மாநகராட்சி தேர்தலுக்கு போட்டோ காட்டுவதற்கும் உதவுமே தவிர தத்தளிக்கும் மக்களுக்கு உதவாது.இந்த வெள்ள காலத்திலும் மக்களின் துயர் துடைக்க செயல்படாமல் வெறும் விளம்பரத்தில் ஈடுபடுவது உகந்தது அல்ல என் குறிப்பிட்டுள்ளார் 

மேலும் மற்றொரு பதிவில் அருவருப்பை உண்டாக்கும் விளம்பர மோகத்தை விட்டுவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்களின் துயர் துடைக்கு நீங்களும் உங்கள் சாகாக்களும் அரசு இயந்திரங்களையும் ஈடுபடுத்துங்கள் எனவும் 

1967-லிருந்த ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளினுடைய ஆட்சியின் அலங்கோலம் தான் இன்று சென்னை வெளிக்காட்டும் வெள்ள அடையாளம். தலைநகரில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு சில மேம்பாலங்களை மட்டுமே கட்டி, அதை மட்டுமே பொதுமக்களுக்குக் காட்டி ஓட்டுக்களை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்ததன் விளைவு.

சென்னையின் கட்டமைப்பு வசதிகளைச் சர்வதேச அளவிற்கு உயர்த்த, 2006-2011 மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியிலிருந்தபோது 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அதன் மூலம் அன்றைய திமுக அரசு எந்தந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.அதேபோல 2011-க்கு பிறகு 2021 வரை ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை எடப்பாடி அரசு என்ன செய்தது? என்பதும் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார் ஷ்யாம் ,

ஷ்யாம் கேட்கும் கேள்விகளை பார்த்த திமுக ஆதரவாளர் ஒருவர் ட்விட்டரில் அவரை டேக் செய்து யாராவது ஒருத்தருக்கு மழைக்கு எதாவது சின்ன உதவி பண்ணீங்களா? இல்ல இது மாதிரியே வெட்டி போஸ்ட் போட்டுட்டு உக்கார்ந்து இருக்கீங்களா? என கேள்வி எழுப்பியிருந்தார் அதற்க்கு ஷியாம் கொடுத்த பதில் பின்வருமாறு ;

முழங்கால் தண்ணீரில் ஷூட்டிங்கு, வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை நிற்கவைத்து ரொட்டி பாக்கெடு கொடுத்து படம் எடுப்பதே ஹீரோயிஸமாக நினைக்கும் இது போன்ற அடிமாட்டு மூளைகள் இருக்கும் வரை,

நகரத்தின் கட்டமைப்பு சீர்படுத்துதல், நிரந்தர தீர்வை பற்றி திராவிட ஸ்டாகிஸ்டுகள் எதற்கு யோசிக்கனும்? என கேள்வி எழுப்பியவருக்கு புரியும் மொழியில் பதில் அளித்து இருக்கிறார் ஷ்யாம் .

மொத்தத்தில் சென்னையில் அடை மழை  வெளுத்து வாங்கியது போல் , திராவிட ஸ்டாக்கிஸ்ட்களை தன் தரப்பு கேள்விகளால் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஷ்யாம் கிருஷ்ணசாமி .