
தமிழகத்தில் தற்போது அதிக வருமானம் ஈட்டி வரும் துறைகள் என்றால் ஒன்று டாஸ்மாக் மற்றொன்று கனிமவளங்கள் இந்தநிலையில் டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழலை வெளிகொண்டுவந்தது அமலாக்கத்துறை. கஅது வெறும் 20% சோதனையின் முடிவுதான் ஆனால் லட்சக்கணக்கான கோடி ஊழல் நடந்திருக்கும் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கலாம் என நினைத்திருந்த திமுகவுக்கு பேரிடியை இறக்கிறது அமலாக்க துறை. சரி டாஸ்மாக் சென்றால் என்ன அதான் கனிமவளதுறை இருக்கே அதை வைத்து தேர்தலை சந்திப்போம் என கணக்குபோட்டுள்ளது ஆளும் தரப்பு அதற்கும் தற்போது ஆப்பு வைத்துள்ளது நீதிமன்றம்.
தமிழகம் முழுவதும் கல்குவாரிகளின் செயல்பாடுகள், அவற்றில் நடக்கும் முறைகேடுகள் குறித்து வெளிவரும் தகவல்கள் பேரதிர்ச்சியை கொடுக்கிறது. ‘புற்றீசல்போல ஆயிரக்கணக்கில் முளைத்துவிட்ட சட்டவிரோத கல்குவாரிகள், கிரஷர்கள்...’, ‘அரசுக்கு 6,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு...’, ‘வெடிபொருள் சப்ளையில் நடைபெறும் முறைகேடுகள்...’ எனக் கிடைத்த தகவல்களெல்லாம் தமிழக மக்களை கிறுகிறுக்கவைத்தன! “தமிழகத்தில், ஆற்றுமணல் தட்டுப்பாடு காரணமாக, எம்.சாண்ட் மணலின் தேவை தற்போது அதிகரித்திருக்கிறது
மேலும் அனுமதிக்கப்பட்ட கல்குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுவது ஒருபுறமிருக்க, அரசிடம் எவ்வித அனுமதியுமே பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி கற்களை வெட்டியெடுத்துக் கொள்ளையடிக்கும் கல்குவாரிகளும் ஏராளமாக இயங்கிவருகின்றன.
சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் மரணத்தைத் தொடர்ந்து, ஓர் ஆய்வைக் கனிம வளத்துறை அதிகாரிகள் தமிழகமெங்கும் மேற்கொண்டனர். அதில், தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் குறைவான கல்குவாரிகளே அரசின் அனுமதியுடன் இயங்குவது தெரியவந்தது. அதேசமயம், 1,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் இயங்கிவரும் நிலை அதிர்ச்சியூட்டியது. பெரும் அரசியல், பணப் பின்புலம் உள்ளவர்களின் கட்டுப்பாட்டில் இந்தச் சட்டவிரோத கல்குவாரிகள் இயங்குவதால், அதையெல்லாம் கனிம வளத்துறை அதிகாரிகளும் கண்காணிக்கவில்லை, மண்டல பறக்கும் படை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.என்ற புகார்கள் எழுந்துள்ளது.
இதற்கிடையே தாது மணல் முறைகேடு வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கடலோர கனிமவள நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில், தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள், அதிக விலை மதிப்புள்ள தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த, 'வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ்' உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்களும் அறிக்கை அளித்தன. தாது மணல் கடத்தல் வாயிலாக, 5,832 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து, 5,832 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக நடந்த தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக, தாது மணல் முறைகேடு வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் கடலோர கனிமவள நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக, சென்னையிலும் 3 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டசபையில் பேசுகையில், கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருநெல்வேலிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அமைச்சர் துரைமுருகன் திடீர் வருகை அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.மேலும் கோபாலபுரமும் இதற்கு பின்னால் இருப்பதால் மீண்டும் டெல்லிக்கு புறப்பட தயாராக இருக்கிறார் மருமகன். சென்ற முறை டாஸ்மாக் விவகாரத்தில்டெல்லி சென்ற மருமகனை கண்டிப்பாக கைது நடவடிக்கை உண்டு என சொல்லித்தான் அனுப்பி உள்ளதாம் டெல்லி.