தந்தி டிவி யில் நெறியாளராக பணியாற்றிவரும் அசோகா எனும் அசோக வர்ஷினி, ட்விட்டரில் திருக்குறள் ஒன்றனை மேற்கோள் காட்டி பதிவிட்ட ட்விட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தந்தி டிவியில் பணியாற்றிவரும் அசோகா தனது ட்விட்டர் பக்கத்தில் " "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்" என்ற திருக்குறளை பதிவு செய்து இருந்தார் இதன் பொருளானது நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்" என்பதாகவும்.
இந்நிலையில் அசோக வர்ஷினி கருத்து கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது, திடீர் என ஏன் இந்த திருக்குறளை பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுந்துள்ளது, பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் தான் அசோகா விமர்சனம் செய்தார் என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சித்தன் குறிப்பிட்டுள்ளார், அதே நேரத்தில் திமுகவினர் அசோகாவின் கருத்திற்கு ஆதரவும், பாஜகவினர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அசோக வர்ஷினி பிரதமர் மோடியை குறிப்பிட்டாரா இல்லை தந்தி தொலைக்காட்சியின் நிர்வாகம் தங்கள் குறைகளை கேட்பது இல்லை என பல ஆண்டுகளாக ஊழியர்கள் சொல்லும் கருத்தை மறைமுகமாக அசோகா குறிப்பிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவை தவிர அசோகா விரைவில் தந்தி டிவியில் இருந்து வெளியேறி வேறு சேனல் ஒன்றில் இணைய இருப்பதாகவும் அதன் வெளிப்பாடாக தற்போது மத்திய மாநில அரசுகளை மறைமுகமாக விமர்சனம் செய்வதாகவும் கூறப்படுகிறது. news18 தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த செந்தில், சீப்பு கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வேலை இழந்தார் தற்போது தீவிர திமுக ஆதரவாளராகவும் அறியப்படுகிறார் செந்தில் அவரை போன்று அசோகாவும் முடிவெடுத்து விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.