நடிகர் விவேக் மரண விவகாரத்தில் கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்லவில்லை எனவும் தடுப்பூசியை போடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக் இதய கோளாறால் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த மன்சூர் அலிகான் முன்னதாக விவேக் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டதால் உயிரிழந்தார் என பேசி சர்ச்சையை உண்டாக்கினார் மன்சூர்.
இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடுவது மட்டுமே தீர்வாக அமையும் என கூறப்பட்டது, மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டால் பாதிப்புகள் அதிகம் இருக்காது எனவும் குறிப்பாக உயிரிழப்புகள் தவிர்க்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மக்களிடம் விழிப்புணர்வு உண்டாகிய நேரத்தில் விவேக் மரணத்தை தொடர்பு படுத்தி மன்சூர் அலிகான் விஷம பிரச்சாரத்தை செய்தார், ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்தன, முன்னாள் ராணுவ வீரர் தினேஷ் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
விவேக் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தடுப்பூசி போட்டு கொண்டார் ஆனால் அவரது நோக்கத்தை சிதைக்கும் விதமாக மன்சூர் அலிகான் இன்னும் சிலர் பிரச்சாரம் செய்துவருவது ஒட்டு மொத்த இந்தியாவிற்குமே அழிவை தரும் எனவும் கடும் கண்டனத்தை பதிவு செய்தார் மேலும் தமிழக அரசு, என்ன செய்கிறது என கேள்வியும் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் போலி தகவலை பரப்பிய மன்சூர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தான் அவ்வாறு பேசவில்லை என பல்டி அடித்துள்ளார் மன்சூர், இருப்பினும் இணையத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் ஆதாரமாக இருப்பதால் நெட்டிசன்கள் அவரை விரட்டி அடித்து வருகின்றனர். விரைவில் மன்சூரை கைது செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற பேச்சுக்கள் தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.