சமீபத்தில் நடைபெறும் சம்பவங்கள் சில சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருக்கின்றன காரணம் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியில் தெரிகின்றனர் ஆனால் யார் பாதிப்பை உண்டாக்கியது என்ற விவாகரமும் நிலவரமும் இதுவரை வெளிவரவில்லை.
புதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்கள் என சுமார் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மஹாபலிபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை.
இந்தநிலையில், கடந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி அங்குள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது சாப்பிட அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் "அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க" என நரிக்குறவ பெண்மணி அஸ்வினி யூடுப் சேனல் ஒன்றில் கேள்வி எழுப்பிய காணொளி வைரலானது.
மேலும், "நாங்க எல்லாம் ஊசி, பாசிமணி விற்கிறோம். எங்களுக்கு சாப்பாடு பிரச்னையில்ல. எங்க குழந்தைக படிக்கனும். எம்.பி.சி பட்டியல்ல இருக்கற எங்களை எஸ்.டி பட்டியலுக்கு மாத்தனும்" எனப் பல்வேறு கோரிக்கைகளையும் அஸ்வினி முன்வைத்தார் இது சமூக வலைத்தளங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து சேகர்பாபு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார், மேலும் நிவாரண பொருள்களும் வழங்கினார், இந்த சூழலில் தீபாவளி அன்று முதல்வர் ஸ்டாலின் அஸ்வினி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நிவாரண உதவிக்களும் வழங்கினார் இந்த சம்பவம் பலரையும் கவர்ந்தது.
ஆனால் இதில் ஒன்று மட்டும்தான் புரியாத புதிராக உள்ளது, நந்தினியை உள்ளே அன்னதானம் சாப்பாடு சாப்பிட அனுமதிக்காத நபர் யார்? அவர் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட கோவில் அதிகாரியா? இல்லை கோவில் அரங்காவலர் குழுவை சேர்ந்தவரா? என்ற எந்த தகவலும் எந்த ஊடகத்திலும் வரவில்லை மாறாக பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் அதற்கு நிவாரணம் வழங்கிய செய்திகள் மட்டுமே வெளிவந்துள்ளன.
குற்றத்தை செய்த நபர் மீது எடுத்த நடவடிக்கை என்ன என இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த தகவலும் இல்லை இதுதான் சந்தேகமாக இருக்கிறது என சிலர் சந்தேகம் எழுப்புகின்றன, ஒருவேலை திட்டமிட்டு மக்கள் மத்தியில் சிம்பதி உண்டாக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகள் போன்றவற்றில் இருந்து திசை திருப்ப உண்டாக்கப்பட்ட நாடகமாக ஏன் இருக்க கூடாது?
ஏன் குற்றம் செய்தவர் யார் என இதுவரை அரசு தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது, மேலும் இப்படித்தான் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் பற்றிய செய்தி வெளியாகி கொண்டு இருக்க.,
அடுத்த சில மணி நிமிடங்களில் முகமத் சமி மீது யாரோ ஒருவர் இணையத்தில் தவறாக பேசிவிட்டார் ஐ சப்போர்ட் ஷமி என ட்ரெண்ட் செய்தனர், பலரும் தங்கள் ஆதரவை ஷமிக்கு தெரிவித்த சூழலில் யார் சமி குறித்து மத ரீதியாக விமர்சனம் செய்தனர் என்ற தகவலும் இல்லை, இது போன்ற முன் ஏற்பாடுகள் தற்போதைய இணைய உலகில் சாத்தியம் என்பதால்..
நரிக்குறவ சமுதாய பெண்களை சாப்பிட விடாமல் தடுத்த மர்மநபர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் வரை இந்த விவகாரத்தில் சந்தேகமும் மேலோங்கியே காணப்படுகிறது.