உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் தகவல்கள் மாறினால் அது சமுதாயத்தில் பிளவை உண்டாக்கும் அளவிற்கு சென்றுவிடும் என்பதை, கமல்ஹாசன் தயாரித்து நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு உண்டான எதிர்ப்பில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
திரைப்படம் வெளியாகாத வண்ணம் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, இந்த சூழலில் நடிகர் சூர்யா தயாரித்து இயக்கிய படம் ஜெய்பீம் தனியார் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது விமர்சன. ரீதியாக திரைப்படம் வரவேற்ப்பை பெற்ற சூழலில் தற்போது அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் ஒரு தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வந்த காவல் அதிகாரி வீட்டில் வன்னியர் அடையாளம் கொண்ட கலாண்டர் இடம்பெற்றது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது, உண்மை கதை என்று அப்படியே கதையை மாற்றி வன்னியர் சமுதாயத்தை வில்லனாக மாற்ற முயன்று இருக்கிறார்கள் என்று வன்னியர் சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில்
ஜெய்பீம் படத்தில் குற்றசாட்டு உள்ளான நபர் வேறு ஒருவர் எனவும், இந்த கொலை வழக்கை நீதிமன்றம் வரை எடுத்து சென்று போராடி வெற்றி பெற்றது வன்னியர்கள்தான் எனவும், இந்த கொலை வழக்கிற்காக ஆரம்பம் முதல் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனை திரௌபதி இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த தகவல் பின்வருமாறு :- பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.
ஆனால் திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்.. #ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும் எனவும் மோகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் பல இடங்களில் சூர்யாவிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் விரைவில் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது, ஒரு வேலை சூர்யா சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் வட மாவட்டங்களில் சூர்யா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக விடமாட்டோம் என வன்னிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எனவே கடும் நெருக்கடி உண்டாகி இருப்பதால் சூர்யா என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.