கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோன காரணமாக மக்கள் பெரும்பாலான நேரங்களில் வீட்டிலேயே செலவிட நேர்ந்தது. வருடந்தோறும் ஒரு முறையாவது சுற்றுலா செல்பவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணத்தை மேற் கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனாதாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் மத்திய அரசு சார்பில் ஷீரடி காசி கயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சுற்றுலா செல்லும் வகையில் .ஐஆர்சிடிசி அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது.
இந்த அறிவிப்பில்,வரும் மார்ச் 18ஆம் தேதி சென்னையில் இருந்து ஷீரடி - சனி சிங்கனாப்பூர் மற்றும் திரிம்பகேஸ்வரர் ஆலயம் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சுற்றுலா செல்ல நபர் ஒருவருக்கு 14 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தில் 3 நாட்கள் சுற்றுலா மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல மார்ச் 28ஆம் தேதி சென்னையில் இருந்து மற்றொரு விமானம் சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் காசி- கயா மற்றும் அலகாபாத் இந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம். இதற்காக 6 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கான கட்டணம் 29 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். உள்ளூர் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, பயண காப்பீடு அனைத்தும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல சுற்றுலா ஏற்பாடுகளை, ரயில்வே நிர்வாகமே செய்து தருவதால், சுற்றுலா செல்ல பொதுமக்கள் நம்பிக்கையுடன் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
More Watch videos