Tamilnadu

கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆப்பு வைத்த திமுக வினர்..! வேற யாரும் வேண்டாம்...ஆப்பு வைக்க நீங்களே போதும் சாமி..

Alagiri and Stallin
Alagiri and Stallin

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுகவிலிருந்து 52 பேரை நீக்கி உத்தரவிட்டுள்ளது தலைமை. இதற்கான காரணத்தைக் கேட்டு தொண்டர்களே அதிர்ந்து போயுள்ளனர்.


வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக அதிமுக- பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவிவருகிறது. இருந்தாலும் பொதுவாக ஆளும் கட்சியின் வேட்பாளர்களே உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையோர் வெற்றி பெறுவது என்பது இயல்புதான். அதே வேளையில் இது உள்ளாட்சி தேர்தல் என்பதால் மக்கள் மத்தியில் நேரடியாக செல்வாக்கு பெற்றவர்கள் சுயேட்சையாக நின்றாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். அந்த வகையில் சுயேட்சை வேட்பாளர்கள் 20 சதவீதம் வரை வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

இப்படியான ஒரு சமயத்தில் பாஜகவும் தனித்துப் போட்டியிடுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் எந்த அளவுக்கு பலம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள பாஜகவுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் . இப்படியான தருணத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து கட்சியில் சீட் கிடைக்காத சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களும் தனித்துப் போட்டியிட மனு அளித்து இருக்கின்றனர். இதனை அறிந்த கட்சி மேலிடம் கட்சியிலிருந்து தற்காலிகமாக அவர்களை நீக்கி உள்ளது.

அந்த வரிசையில் நேற்று முன்தினம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என்பது கூடுதல் தகவல். இந்த நிலையில் தஞ்சை வடக்கு, தெற்கு, நாகை தெற்கு, திருப்பூர் மத்திய மாவட்டம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 52 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரு வித்தியாசத்தை காண வேண்டும் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக கருதப்படும் தேசிய கட்சியான பாஜகவில் அதிக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு 58 சதவீதம் வரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை குறிப்பாக திமுகவைப் பொறுத்தவரையில் பல ஆண்டு காலமாக ஒரு சிறிய பொறுப்பிலேயே இருப்பவர்கள் எப்படியும் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைத்து விடாதா என எண்ணி ஏமாந்தவர்கள், தற்போது திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து நிற்கின்றனர்.

இதில் என்ன பாதகம் என்றால் அதிகாரபூர்வமாக அறிவித்த வேட்பாளர்களை விட இவர்களுக்கு செல்வாக்கு சற்று அதிகம் என்பதால் ஓட்டு உடைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இது குறித்து புகார் தெரிவிக்கவே, அவர்களை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார் துரைமுருகன். இந்த தகவலை அறிந்த வர்கள் என்னடா இது? நீங்களே சீட் ஒதுக்குவீங்களாம்.. நீங்களே எதிர்த்து போட்டி போடுவீங்களாம்..  என புலம்பி உள்ளனர் கூட்டணி கட்சியினர்.

More Watch Videos