தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.பல்வேறு நபர்கள் தொடர்ந்து பாஜகவில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் அவரவர் விருப்ப கருத்துக்களையும், பாஜக குறித்து போற்றி சமூக வலைதள பக்கங்களில் எழுதியும் வருகின்றனர்.
முன்பெல்லாம் ஏதாவது பேசினாலும் கூட அது தனக்கு சாதகமாக மாறி சிக்கலில் சிக்கி விடும் என்றெல்லாம் எண்ணியவர்கள், இப்போது உண்மையைப் பேசுவதற்கு தயங்கக் கூடாது என எண்ணியும், அப்படி பேசும்போது பிரச்சனைகள் வந்தாலும் ஆதரவு கொடுப்பதற்கு பாஜக இருக்கின்றது என்ற உணர்வோடு பலரும் அவரவர் கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட தொடங்கியிருக்கின்றனர்.
பலரும் வீடியோக்கள் ஆகவும் பதிவு செய்கின்றனர். அந்த வகையில் வலதுசாரி சிந்தனை கொண்டவராக அறியப்படும் ரமேஷ் குமார் என்ற நபர் அவரது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்து மதத்திற்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் இன்று மிகவும் இறுக்கமான காலகட்டம் கூர்மையாக கூறப்போனால் வாழ்வா சாவா, இந்த நிலை இந்தியாவுக்கு மட்டுமல்ல இதற்கு முன்னதாக பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது,உதாரணமாக. இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஒட்டுமொத்த ஆப்பிரிக்கா அயர்லாந்து.
மேற்கூறிய அனைத்து நாடுகளுமே கிறிஸ்துவ மதமும் இஸ்லாம் மதமும் அல்லாத நாடாகும் ஆனால் இன்று இவ்விரு மதங்களும் ஆக்கிரமித்துவிட்டன இப்பொழுது இந்தியாவை குறிவைத்து விட்டனர் இப்பொழுது நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நம்முடைய கலாச்சாரமும் மதமும் கண்டிப்பாக அழிந்துவிடும் இயற்கை தாய் நமக்கு மோடி அண்ணாமலை எச் ராஜா வானதி சீனிவாசன் யோகி ஆதித்யநாத் என்று பல பெரும் தலைவர்களை ஆயுதமாக தந்துள்ளது
இதில் நாமும் பங்கு கொள்ள வேண்டும் இதற்கு தலைவர்களோ சங்கங்களும் தேவையில்லை நாம் ஒவ்வொருவரும் தலைவர்களாக சங்கங்களாக நினைத்துக்கொண்டு நாள்தோறும் நம் நாட்டின் கலாச்சாரத்தை பற்றியும் மதத்தைப் பற்றியும் இந்த நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்த பல தலைவர்களைப் பற்றியும் பரப்புரை செய்து கொண்டே இருக்க வேண்டும் இசைக்கும் பிச்சைக்கும் அடிபணிந்து தன் தாய் நாட்டையே காட்டிக் கொடுக்கும் கயவர்களை சந்திக்கு கொண்டுவரவேண்டும் நாம் அனைவரும் இதை நம்முடைய தலையாய கடமையாக நினைத்து நம்மை நாம் இந்த தாய் நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் ஜெய்ஹிந்த் இவ்வாறு பதிவிட்டு உள்ளார் ரமேஷ் குமார் என்ற நபர்.