Tamilnadu

மதுரையில் அரசு அதிகாரிகள் அட்டூழியம் .....முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கண்ணீர்.

Madurai
Madurai

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் கண்மாய், சுமார் 1500 ஏக்கர் மேல் விவசாய நிலங்களுக்கு இந்த கண்மாய் தான் நீர் பாசனம், வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் இந்த கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு அங்கே இருக்கும் சுமார் 1500 ஏக்கர் மேல் உள்ள விவசாய நிலத்துக்கு தண்ணீர் திறந்துவிட படும். நிலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கண்மாய் அரசு அதிகாரிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருவது விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்து வருகின்றனர்.


மீன் பிடி குத்தகை என்ற பெயரில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன் நிலையூர் கண்மையை ஆக்கிரமித்துள்ள ஒரு தரப்பினர், கண்மாயில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரின் கொள்ளளவு அதிகமாக இருப்பதால், இவர்களால் மீன் பிடிக்க முடியவில்லை என்கிற காரணத்தினால் திருப்பரங்குன்றம் வட்டார பொதுப்பணித்துறை, மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன் கடந்த மூன்று நாட்களுக்கு மேலான கண்மாயில் உள்ள மூன்று மடைகளிலும் தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டு விவசாய நிலத்துக்கு பயன் பெறாத வகையில் வீணடிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் வைகை அணையில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட்டால் அதிக கொள்ளவை தண்ணீர் எட்டிவிடும், இதனால் மீன் பிடிக்க முடியாது என்பதால் அரசு அதிகாரிகள் துணையுடன் நிலையூர் கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீரை மற்றொரு கண்மாய்க்கு திருப்பி விடுகின்றனர் என கூறப்படுகிறது. இதனால் சுமார் 1500 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலத்தை நம்பி உள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து கண்ணீருடன் என்ன செய்வது என தெரியாமல் முடங்கி போய் உள்ளனர்.

சுமார் 365 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கண்மாயில், நீர் பிடி பட்டாவில் கட்டப்பட்டுள்ள வீட்டினை இடிக்க உயர்நிதிமன்ற உத்தரவு பிறப்பித்து திருப்பரங்குன்றம் வட்டார வருவாய்த்துறை மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதற்கு காரணம் கண்மாயில் பெரும்ப்பாலும் நீர்பிடி பட்டாவில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அரசு அதிகாரிகள் வீடுகள் என கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் வட்டார பொதுப்பணி துறையில் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை விவசாயிகளுக்கு எதிராகவும், மீன்பிடி குத்தைகையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றசாட்டு வைக்கின்றனர்.

இந்நிலையில் நிலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இதற்கு முன்பு மனு கொடுத்தும்,  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சம்பந்த பட்ட திருப்பரங்குன்றம் வட்டார அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் வற்புறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை என  கூறப்படுகிறது,கண்மாயில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை  உடனே நிறுத்தி விவசாயிகளை காக்க தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீன் பிடி குத்தகை என்கிற பெயரில் கண்மாயை அக்கிரமித்துள்ளவர்களிடம் இருந்து கண்மாயை மீட்டு தரவேண்டும் நடவடிக்கை எடுக்க கிராம வலியுறுத்தியுள்ளனர்.