Politics

தடுப்பூசி விற்பனையில் காங்கிரஸை பின்பற்றப்போகிறதா திமுக...!??

vaccine sale stalin rahul
vaccine sale stalin rahul

தடுப்பூசி விற்பனையில் காங்கிரஸை பின்பற்றப்போகிறதா திமுக...!??


காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசு தடுப்பூசி விற்பனையை தொடங்கியுள்ளது.பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்து தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 1060க்கு விற்பனை செய்கிறது..!

இதுகுறித்து பஞ்சாப் மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தடுப்பூசி இணைப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியான விகாஸ் கார்க் கூறுகையில் " ரூ400 க்கு கொள்முதல் செய்து தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 1060க்கு விற்பனை செய்கிறோம். இதுவரை 20000 டோஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் Corporate Social Responsibility (CSR) எனும் அரசுசார் அமைப்பின் கீழ் தடுப்பூசி விற்பனை நடைபெறுகிறது. தனியார் மருத்துவமனைகள் CSR வங்கி கணக்கில் தொகையை டெபாசிட் செய்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம். " என கூறினார்.

தனியாருக்கு விற்பனை செய்து ஒரு டோஸுக்கு ரூ660 லாபம் பார்க்கிறது காங்கிரஸ் அரசு.தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு 1560க்கு விற்பனை செய்கின்றன.இதனால் பாதிக்கப்படுவது சராசரி சாமானிய மக்கள் தான்.

மேடை தோறும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என கூக்குரலிடும் ராகுல்காந்தி பஞ்சாப்பில் தனது கட்சியின் மக்களுக்கு எதிரான போக்கை காணாமல் இருப்பது நகைமுரண்.(ஏற்கனவே காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சமீபத்தில் தடுப்பூசிகள் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது மிக கொடுமை.)

மேலும் அரசு தரப்பில் தடுப்பூசி விற்பனைக்கு தரும் விளக்கம் விந்தையிலும் விந்தை. "நாங்கள் ரூ400க்கு கொள்முதல் செய்து 1060 க்கு தனியாருக்கு விற்பனை செய்கிறோம். இதனால் மருத்துவமனைகளுக்கு நேரடி கொள்முதலை விட 160ரூபாய் குறைவாக கிடைக்கிறது." என விளக்கம் கொடுக்கிறது.

இதை விட பெருங்கொடுமை,காங்கிரஸ் தலைமையிலான அரசு தடுப்பூசி நன்கொடையாளர்களை அழைக்கிறது..!நன்கொடை தர விரும்பும் நபர்கள் அரசு வங்கிகணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இலவசமாக தடுப்பூசியை மக்களுக்கு தரும் வேளையில் இந்த பேரிடர் காலத்திலும் மக்களை பஞ்சாப் மக்களை காங்கிரஸ் அரசு வஞ்சிக்கிறது.மேலும் தனியாருக்கு தடுப்பூசிகளை விற்பனை செய்வதால் அரசு மருத்துவமனைகளில் போலியான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுத்தப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.காங்கிரஸ் கூட்டணியான திமுகவும் இதே பாணியை பின்பற்றிவிடுமோ என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

....உங்கள் பீமா