மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலான TNNEWS24 வெளியிட்ட வீடியோ! நேரடியாக தொடர்பு கொண்ட அமைச்சர்Tnnews24air
Tnnews24air

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் TNNEWS24AIR முகநூல் பக்கத்தில், பெண்கள் மூவர் தங்கள் பகுதியில் நிலவும் குறைகளை சுட்டிக்காட்டி வெளியிட்ட வீடியோவை பதிவு செய்து இருந்தோம், இந்த வீடியோ தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

15 லட்சம் பார்வையை கடந்து 43 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை தற்போது வரை ஷேர் செய்து இருந்தனர், இந்த வீடியோவில் தமிழக அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை எனவும், பொருள்கள் வாங்க சென்றால் காவல்துறையினர் விரட்டுவதாகவும், வீட்டில் இருந்தால் காய்கறி வண்டி வரவில்லை நாங்கள் வாழ்வாதா இல்லை சாவதா என பெண் ஒருவர் கேள்வி எழுப்பி தங்களது கஷ்டத்தை பதிவு செய்து இருந்தார்.


இந்த வீடியோ திமுக ஆட்சியின் அவலத்தை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் tnnews24 வெளியிட்ட வீடியோவிற்கு கீழே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ காத்திருப்பதாகவும், அவர்களது தொடர்பு எண்னை கொடுக்கவும் அல்லது தனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என பதிவிட்டுள்ளார்.

சமூகத்தில் நிலவும் முக்கிய சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகாத வீடியோக்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் tnnews24 குழுவிற்கு பலரும் தங்களது ஆதரவை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share at :

Recent posts

View all posts

Reach out